சுவிட்சர்லாந்தில் “மெளனித்த பொழுது” – தமிழ் திரைப்பட சிறப்பு காட்சி
தமிழ் மக்களின் பெருமிதமாக, பல்வேறு நாடுகளில் பாராட்டைப் பெற்ற திரைப்படம் “மெளனித்த பொழுது” விரைவில் சுவிட்சர்லாந்தில் திரையிடப்பட உள்ளது.
இந்த திரைப்படம் PS சுதாகரன் அவர்களின் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ளது. “ஒருத்தி” திரைப்படக் குழுவின் கலைஞர்கள் இணைந்து நடித்துள்ள இந்த படைப்பு, தமிழ் சமூகத்தில் பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது. சமூக பிரச்சினைகளைக் கூறும் விதத்திலும், உணர்ச்சிகரமான கதைக்களத்தாலும், இது ஒரு முக்கியமான படைப்பாக மதிக்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சி, கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளில் வெற்றிகரமாக திரையிடப்பட்டதையடுத்து, சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள சிறப்பு காட்சியாகும்.
தமிழ் மக்களின் ஆதரவோடு நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சி, சமூக குரலாகவும், மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் ஓர் முக்கிய மேடையாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிகழ்ச்சி விவரம்:
- தேதி: 14 செப்டம்பர் 2025 (ஞாயிற்றுக்கிழமை)
- நேரம்: மாலை 15.00 மணி
- இடம்: Kino Claudia, Schaffhauserstrasse 76, 8302 Kloten, Zurich
தொடர்புக்கு:
- லிங்கம்: +41 79 273 92 31
- பெருமாள்: +41 79 443 35 11
- நந்தன்: +41 78 666 26 40
- மணிக்ஸ்: +33 6 51 84 25 99