சாஃப்ஹௌசன் கன்டோனில் பல தொலைபேசி மோசடி முயற்சிகள்.!!
சாஃப்ஹௌசன் கன்டோன் போலீசாருக்கு வியாழக்கிழமை காலை பல தொலைபேசி மோசடி முயற்சிகள் குறித்த புகார்கள் வந்துள்ளன. ஒரு உயர்ரக ஜெர்மன் (Hochdeutsch) மொழியில் பேசும் பெண், தன்னை போலீஸ் அதிகாரியாக அறிமுகப்படுத்தி, ஒரு குடிமகனை அழைத்தார். அவர், “உங்கள் ஊரில் திருட்டு நடந்துள்ளது, அதனால் உங்கள் சொத்து/சொத்துக்கள் ஆபத்தில் உள்ளன” என்று கூறியுள்ளார்.
ஆனால், எச்சரிக்கையுடன் நடந்துகொண்ட அந்த குடிமகன் சில கேள்விகளை எதிர்கொண்டபோது, அழைப்பாளர் உடனே தொலைபேசியை நிறுத்திவிட்டார். போலீசார் இதை தொலைபேசி மோசடி முயற்சி என உறுதிப்படுத்தினர்.

பல புகார்கள்
இதே மாதிரியான பல அழைப்புகள் குறித்து, அதே நாளில் காலை, சாஃப்ஹௌசன் போலீசின் அவசர மற்றும் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்துக்கு பல்வேறு புகார்கள் வந்துள்ளன. இச்சம்பவங்கள் கடந்த 21ம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இவ்வகையான மோசடிகள் தொடர்பில் போலீசார் பொதுமக்களுக்கு சில அறிவுரைகளையும் வழங்கியுள்ளனர்.
- தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளில், உங்களை அச்சுறுத்தும் விஷயங்களை (உதாரணமாக: விபத்து, நெருங்கியவரின் மரணம் போன்றவை) கூறி பணம் கேட்பவர்கள் மீது எச்சரிக்கையுடன் இருங்கள்.
- உங்கள் சொத்து, பணம், வங்கி விவரங்கள் பற்றிய எந்த தகவலையும் தொலைபேசியில் பகிர வேண்டாம்.
- “உங்கள் வீட்டிற்கு அருகே கொள்ளையர்கள் பிடிக்கப்பட்டுள்ளனர்; அவர்களிடம் உங்கள் பெயர் மற்றும் முகவரி கொண்ட ஆவணம் கிடைத்துள்ளது” என்று சொல்வோரின் வார்த்தைகளை நம்ப வேண்டாம்.
- உடனடியாக உங்களின் உறவினர்களை நேரடியாக தொடர்பு கொள்ளவும், சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக போலீசாரை தொடர்பு கொள்ளவும்.
- குறிப்பாக மூத்த நபர்களிடம் இந்த மோசடி முறைகளை விளக்கி, விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.
அவசர தொடர்பு எண்
சாஃப்ஹௌசன் போலீசார், எந்த நேரத்திலும் சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். எனவும் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
@Kapo SH