சிவப்பு விளக்கை புறக்கணித்தமையால் ஏற்பட்ட பயங்கர விபத்து : 11 பேர் காயம்
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை மாலை 7.30 மணியளவில், ஆர்காவ் மாநிலத்தின் வூரன்லோஸ் அருகே உள்ள Furttal சந்திப்பில், ஒரு பேருந்து (மினி வான்) மற்றும் Audi கார் இடையே கடுமையான மோதல் நடந்தது.
79 வயது ஓட்டுநர், A1 நெடுஞ்சாலையிலிருந்து Otelfingen (ஓட்டல்ஃபிங்கன்) நோக்கி நேராக செல்ல முயன்றபோது, சிக்னல் சிவப்பாக இருந்ததை அவமதித்து, எதிரே (வெட்டிங்கன்) Wettingen-இலிருந்து வந்த Audi Q5 காருடன் நேருக்கு நேர் மோதல் ஏற்பட்டது.
Toyota Proace என்ற இந்த மினி-வானில், உருகுவே (Uruguay) நாட்டைச் சேர்ந்த 9 பேர் பயணம் செய்தனர், அவர்கள் விமான நிலையம் நோக்கிச் செல்கின்றனர். பயணிகளில் 4 குழந்தைகள் (வயது 9 முதல் 12 வரை) இருந்தனர்.

மோதலால் 11 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் லேசான காயமடைந்தனர், ஒரு பயணிக்கு மட்டும் மருத்துவமனையில் சேர்க்கும் அளவிற்கு தீவிர காயம் ஏற்பட்டது. மேலும் Audi காரில் பயணித்த இருவரும் காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு பல ஆம்புலன்ஸ்கள் விரைந்து சென்று அருகிலுள்ள மருத்துவமனைகளில் அவர்களை அனுப்பின.
இரண்டு வாகனங்களும் முழுமையாக சேதமடைந்தன. இது போக்குவரத்துக்கு பெரும் இடையூறாக இருந்தது. சாலை இரவு 9.15 மணி வரை மூடப்பட்ட நிலையில், தீயணைப்பு துறையினர் மாற்று வழித்தடம் ஏற்பாடு செய்தனர். விபத்துக்கான தெளிவான காரணம் குறித்து தற்போது காண்டோனல் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றது.
@Kapo AG