Friday, May 17, 2024

பிரபல்யமான செய்திகள்

சுவிட்சர்லாந்தில் கஞ்சாவை சட்டபூர்மாக்குவது தொடர்பில் தீர்மானம்.?

spot_img

சுவிஸ் குடிமக்கள் கஞ்சாவை சட்டப்பூர்வமாக்குவது குறித்து வாக்களிக்க உள்ளனர். சுவிட்சர்லாந்தில் கஞ்சாவை சட்டப்பூர்வமாக்குதல், வைத்திருத்தல், பயிரிடுதல் மற்றும் விற்பனை செய்தல் தொடர்பாக ஒரு புதிய முயற்சியின் முன்மொழிவை பெடரல் அலுவலகம் அறிவித்துள்ளது.

‘கஞ்சாவை சட்டப்பூர்வமாக்குதல், பொருளாதாரம், ஆரோக்கியம் மற்றும் சமத்துவத்திற்கான வாய்ப்பு’ என்ற தலைப்பில், கஞ்சா பொருட்களின் வரிவிதிப்பு மூலம் கிடைக்கும் வருவாயை போதைப்பொருள் தடுப்புக்கு ஒதுக்க வேண்டும் என அது குறிப்பிடுகிறது.

Suica legaliza por completo a canabis para uso medicinal 1 scaled 1

தேசிய அளவில் இதுதொடர்பாக வாக்கெடுப்பை நடாத்துவதற்கு 100,000 கையெழுத்துகளை சேகரிக்க அமைப்பாளர்களுக்கு 18 மாதங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு 2008-ல் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 63 சதவீத வாக்காளர்கள் சட்டப்பூர்வமாக்கலை நிராகரித்திருந்தனர். எவ்வாறாயினும், 2021 இல் வெளியிடப்பட்ட அரசாங்க கணக்கெடுப்பின்படி, அதன் பின்னர் மக்கள் மனநிலை மாறியிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

spot_img

பிராந்திய செய்திகள்

spot_img
spot_img