சுவிட்சர்லாந்தில் குறைவடையும் வாடகை வீடுகள் : வெளியான அதிர்ச்சி தகவல்.
சுவிட்சர்லாந்தில் வீடுகள் தேடி வரும் பொதுமக்களுக்கு இது அதிர்ச்சி அல்ல. இருந்தாலும், அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தற்போது நிலவும் வீட்டு பற்றாக்குறையைத் தெளிவாக உறுதிப்படுத்துகின்றன.
கடந்த சில மாதங்களில் வீட்டு பற்றாக்குறையில் எந்த முன்னேற்றமும் இல்லை; மாறாக, நிலைமை மேலும் மோசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டாட்சி புள்ளிவிவர அலுவலகம் (FSO) வெளியிட்ட தகவலின் படி, ஜூன் மாதத்தில் சுவிட்சர்லாந்தின் காலியிட வீதம் 1% ஆகக் குறைந்துள்ளது. இது, முந்தைய ஆண்டை விட 6.8% குறைவைக் குறிக்கிறது.

இந்த பற்றாக்குறை, குறிப்பாக 15 கண்டோன்களில் மிகவும் கடுமையாக உள்ளது. அதில் ஜெனீவா (0.34%) மிகக் குறைந்த காலியிட வீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து சுக் (0.42%) மற்றும் சூரிக் (0.48%) இடம் பெறுகின்றன.
கடந்த ஐந்து ஆண்டுகளாக சுவிட்சர்லாந்தில் காலியான வாடகை குடியிருப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது என்று கூட்டாட்சி புள்ளிவிவர அலுவலகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதனுடன், வீட்டு வசதி குறைபாட்டை சமாளிக்க புதிய தீர்வுகள் தேவைப்படுகின்றன என்பதையும் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
© KeystoneSDA