சுவிட்சர்லாந்தில் வீடு வாங்க விரும்புவோருக்கு வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்.!!
சுவிட்சர்லாந்தில் வீடு வாங்க விரும்புவோருக்கு இன்னொரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. Raiffeisen வங்கியின் அண்மை கணக்கெடுப்பின்படி, 2025ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை, தனி வீடுகளின் விலை சராசரியாக 1.5 சதவீதம் உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், கூட்டுறவு குடியிருப்புகளின் (condominiums) விலை 1.8 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் மற்றும் மத்திய சுவிட்சர்லாந்து பகுதிகளில் வீட்டு விலை 7 சதவீதம் என்ற பெரும் விகிதத்தில் உயர்ந்துள்ளது. இந்த உயர்வு தற்போது வரை பதிவான மிக அதிகமானது என கூறப்படுகிறது.

சமீப காலம் வரை விலையுயர்ந்த பிராந்தியமாக இருந்த ஜெனிவா ஏரி (Lake Geneva region), இந்த முறையில் மிதமான 2 சதவீத மட்டுமே விலை உயர்வைச் சந்தித்துள்ளது.
மத்திய சுவிட்சர்லாந்து பகுதியில் வீட்டு விலை 5.9% உயர்ந்துள்ளதுடன், கிழக்கு பகுதி மாகாணங்களில் (Eastern cantons) 4.8% உயர்வும் பதிவாகியுள்ளது.
வீட்டு வாடகை மற்றும் வீடு வாங்கும் செலவுகள் தொடர்ந்தும் உயரும் வகையில், பொருளாதார நிபுணர்கள் புதிய வீடுத் திட்டங்களையும், சந்தை நிபுணத்துவத்தையும் நன்கு கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
@Keystone SDA