சுவிட்சர்லாந்தை விட்டு வர மனமேயில்லை : பிரபல இந்திய நடிகை வெளியிட்ட பதிவு! சுவிஸ் சுற்றுலாவை விரும்பாதவர்கள் குறைவு என்றே கூறலாம்.
இந்திய நடிகைகள் பலருக்கும் சுவிட்சர்லாந்து விருப்ப சுற்றுலாத்தலமாக மாறி வருகிறது. தமன்னா, கரீனா கபூரைத் தொடர்ந்து, தற்போது முன்னாள் உலக அழகியும், நடிகையுமான பிரியங்கா சோப்ராவும் சுவிட்சர்லாந்தில் விடுமுறையை செலவிடும் புகைப்படங்களை சமூக ஊடகம் ஒன்றில் வெளியிட்டுள்ளார்.
அவருக்கும் சுவிட்சர்லாந்தை விட்டு வர மனமேயில்லையாம். சுவிட்சர்லாந்தில் ஆல்ப்ஸ் மலைத்தொடரைப் பார்வையிட்டவண்ணமிருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள பிரியங்கா, இங்கேயே இருந்துவிடட்டுமா என கேட்கிறார்.
தற்போது, Heads Of State என்னும் ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் பிரியங்கா, ஒரு திரைப்படத்தை தயாரிக்கவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.