ஆர்காவ் கன்டோனில் போலீஸ் வாகனத்தில் அழைத்து சென்ற கைதி தப்பியோட்டம்
அல்பேனியாவைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவர் ஆர்காவ் கன்டோன் பாடெனில் (Baden) போலீஸ் வாகனத்தில் ஏறுவதற்குமுன் தப்பிச் சென்றுள்ளார். அப்போது அவர் கைவிலங்கு அணிந்திருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை காலை 9 மணிக்கு முன்னதாகவே நடந்துள்ளது. தகவல் கிடைத்தவுடன், போலீசார் பல்வேறு தேடல் நாய்கள் உதவியுடன் விரிவான தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இருந்தும், மதியம் வரை அந்த கைதி பிடிபடவில்லை.
கைதி பொதுமக்களுக்கு ஆபத்தானவர் அல்ல என போலீசார் கூறினார்கள். தப்பியோடியவர் கருப்பு பேண்ட், கருப்பு ஜாக்கெட்மற்றும் வெள்ளை காலணிகள் அணிந்திருந்தார்.
தப்பியோடிய இளைஞரின் புகைப்படத்தையும் போலீசார் தற்போது வெளியிட்டுள்ளனர். இவரைப் பற்றிய தகவல்கள் தெரிந்தவர்கள் உடனே போலீசாரை தொடர்புகொள்ளுமாறு கேட்டுள்ளனர்.
@Kapo AG