ஞாயிற்றுக்கிழமை இரவுஇ லங்ஸ்திராசவில் ஒரு இளைஞர் குழு இரண்டு சூரிச் நகர காவல்துறை அதிகாரிகளைத் தாக்கி காயப்படுத்தியுள்ளது.
இதில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில்,
குற்றவியல் துறையைச் சேர்ந்த இரண்டு போலீஸ் அதிகாரிகள் அதிகாலை ஒன்றரை மணிக்கு சற்று முன்னதாக மாவட்டம் 4 ல் இரவுப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இரண்டு சிவில் பொலிஸ் அதிகாரிகளில் ஒருவரின் தலையில், குழுவில் இருந்து அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திடீரென தாக்கினார்.
அவரும் அவரது பணி சகாவும் குண்டர்களை கைது செய்ய முயன்றபோது, அவர்கள் குழுவில் உள்ள மற்றவர்களால் உடல் ரீதியாக தாக்கப்பட்டனர். மேலும் வாய்மொழியாக அச்சுறுத்தப்பட்டதாக போலீஸ் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
தகராறில் ஈடுபட்ட ஏழு முதல் எட்டு பேர் இறுதியில் தப்பிச்சென்றுள்ளனர். சிறிது நேரத்தில் அவர்களில் இருவரை சுற்றியுள்ள பிரதேசத்தில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இரு இளைஞர்கள் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.