சூரிச்சில் தொலைபேசி வழி மோசடிச் சம்பவங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
கடந்த ஆண்டில் சூரிச் கான்டனில் 190 தெலைபேசி வழியான மோசடிகள் பதிவாகியுள்ளன.
அண்மைய ஆண்டுகளில் தமது நேசத்திற்கு உரியவர்கள் விபத்துக்குள்ளாகியுள்ளதாக கூறி மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

உறவினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பிணையில் விடுவிக்க பணம் தேவை எனவும் தொலைபேசி வழியாக கூறி பணம் பறிக்கும் சம்பவங்களும் பதிவாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஆண்டில் இடம்பெற்ற மோசடி சம்பவங்களின் காரணமாக 5.8 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் வரையில் மக்கள் இழந்துள்ளனர்.
அண்மைய ஆண்டுகளுடன் ஒப்பீடு செய்யும் போது கடந்த ஆண்டில் தொலைபேசி வழியான மோசடிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
பொலிஸாரை போன்றும் தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்தி மோசடிகள் மேற்கொள்ளப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.