சூரிச் கன்டோனில் போலி தொலைபேசி மோசடி மூலம் அரை மில்லியன் பிராங்குகள் மோசடி செய்த மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக நேற்று சூரிச் கன்டோனல் போலீசார் வெளியிட்ட அறிக்கையின் படி கடந்த ஏப்ரல் 29ம் திகதி சூரிச்சில் வசிக்ககூடிய 79 வயதான முதியவர் ஒருவருக்கு போலி தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.
தொலைபேசியில் பேசியவர் தன்னை ஒரு போலீஸ் அதிகாரி என்று குறிப்பிட்டதோடு குறித்த முதியவரின் வங்கிக்கணக்கில் கறுப்புப்பணம் வைப்பு செய்யப்பட்டிருப்பத முறைப்பாடு வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வங்கியில் உள்ள மிகுதி பணத்தை வீட்டில் கொண்டுவந்து வைக்கும்படியும் வீட்டிற்கு போலீசார் அதனை ஆய்வு செய்ய வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதைக்கேட்டு சந்தேகமும் அதிர்ச்சியும் அடைந்த முதியவர் அருகிலுள்ள காவல் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை அடுத்தே மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒரு பெண்ணும் அடங்குவார். அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தில் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது பல்வேறு வீடுகளில் இருந்து அரை மில்லியன் சுவிஸ் பிராங்குள் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.