சுவிட்சர்லாந்தில் நீண்டகாலமாக தீர்க்கப்படாத கொலை சம்பவம் தொடர்பான வழக்கு தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2007 ஆண்டில் 27 வயதுடைய எகிப்திய இளைஞர் ஒருவர் பிராவென்பேல்ட் பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். எனினும் குற்றவாளிகளை பிடிக்கும் முயற்சி பல ஆண்டுகளாக புலனாய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
பின்னர் 2018 ம் ஆண்டில் இது சம்மந்தமாக ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்தி, போலீசார் பலரிடம் இருந்தும் ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களை திரட்ட ஆரம்பித்தனர். அதன் பின்னராக சம்பவம் இடம்பெற்று 16 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணை நடத்தப்படுகிறது.
தொலைக்காட்சி நிகழ்ச்சியைத் தொடர்ந்து வந்த தகவல்கள், விரிவான விசாரணைகள் மற்றும் கண்காணிப்பு ஆகியவையின் உதவியுடன் இறுதியாக மார்ச் 2022 இல் சந்தேக நபர்கள் யார் என்பதை போலீசாரால் கண்டுபிடிக்க முடிந்தது.
63 வயதான சுவிஸ் நபரும், 59 வயதான இத்தாலிய நபரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். கொலைசெய்யப்பட்ட நபரை ஒரு காட்டுப்பகுதிக்கு அழைத்த இருவரும் தூரத்தில் இருந்து தலையில் குறிபார்த்து பலமுறை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
பின்னர் இறந்த உடலை 30 கிலோ எடையுள்ள கான்கிரீட் கட்டில் கட்டி, துர்காவ் அருகே உள்ள ஒரு குளத்தில் மூழ்கடித்துள்ளனர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குற்றவளிகளாக கருதப்படும் இரு நபர்களும் 2004 இல் திருமணம் செய்து கொண்டு ஷாஃப்ஹவுசன் மாகாணத்தில் வெவ்வேறு இடங்களில் வசித்து வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. கொலை தொடர்பாக இன்னும் இரு நபர்களும் மறுத்து வரும் நிலையில் இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.