சுவிஸில் தயாரிக்கப்படும் கோக கோலா மீண்டும் மிக்ரோஸ் கடைகளில்
சூரிக்: சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய சூப்பர் மார்க்கெட் சங்கிலியான மிக்ரோஸ் (Migros) மீண்டும் சுவிஸில் தயாரிக்கப்படும் கோக கோலாவை விற்பனை செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு, சுவிஸில் உரிமம் பெற்று தயாரிக்கப்பட்ட கோக கோலா, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பானங்களை விட அதிக விலை கொண்டிருந்ததால், மிக்ரோஸ் மற்றும் பிற பெரிய விற்பனையகங்கள் இதன் விற்பனையை நிறுத்தியிருந்தன.
அந்த இடைப்பட்ட காலத்தில், மிக்ரோஸ் சுவிஸ்சில் உள்ள உற்பத்தியாளருடன் சிறந்த விலையைப் பெற பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தபோதிலும், விலையிலான நன்மைக்காக வெளிநாடுகளில் இருந்து கோக கோலாவை இறக்குமதி செய்து விற்றது.

தற்போது பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்துள்ளதாக மிக்ரோஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதனால், தற்போதைய கையிருப்பு முடிந்தவுடன் சுவிஸில் தயாரிக்கப்படும் கோக கோலா மீண்டும் மிக்ரோஸ் ல் கிடைக்கும்.
எனினும், புதிய விலையை மிக்ரோஸ் இதுவரை வெளிப்படுத்தவில்லை. மேலும், மிக்ரோஸ்ஸின் கீழ் செயல்படும் டென்னர் (Denner) மற்றும் மிக்ரோலினோ (Migrolino) விற்பனை நிலையங்களிலும் சுவிஸ் கோக கோலா மீண்டும் விற்கப்பட உள்ளது. $
@KeystoneSDA