சுவிட்சர்லாந்தில் Migros மற்றும் Coop எழுந்துள்ள விமர்சனம்! சுவிட்சர்லாந்தில் Migros மற்றும் Coop அங்காடியில் வேலைசெய்யும் பெண் காசாளர்கள் தலையில் முக்காடு அணிவதை தடை செய்கிறது.
சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய பல்பொருள் அங்காடி சங்கிலியான மிக்ரோஸ், தன்னிடம் வேலை செய்த இஸ்லாமியhன காசாளர் ஒருவர் தலைக்கவசத்தை கழற்ற மறுத்ததினால் பணிநீக்கம் செய்த சம்பவம், மத பாகுபாடு ஏற்பட்டுத்தப்படுவதாக கருதி ஒரு வழங்கினை சந்தித்துள்ளது.
இருப்பினும், மிக்ரோஸ் மற்றும் அதன் முக்கிய போட்டியாளரான கோப், இரு நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுடன் நேரடி தொடர்பில் இருக்கும் ஊழியர்கள் வpற்பனையாளர்களுக்கென வழங்கப்பட்ட பிரத்தியேகமான ஆடைகளை தவிர வேறு ஆடைகளை அணிய அனுமதிக்கப்படுவதில்லை என்றும் தங்கள் நிறுவனத்தின் ஆடைக் குறியீடுகள் இது தொடர்பாக தெளிவாகக் கூறுவதாகவும் வாதிட்டுள்ளனர்.
‘இதில் தலைக்கவசங்கள், தலைப்பாகைகள் அல்லது கிப்பாக்கள் உட்பட மத தலைக்கவசங்களும் அடங்கும்’ என்று மிக்ரோஸ் செய்தித் தொடர்பாளர் கார்மென் ஹெஃப்டி கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.