சுவிட்சர்லாந்தில் mcdonalds ஏழு புதிய உணவகங்களை திறக்க திட்டம் அமெரிக்க துரித உணவு நிறுவனமான மெக்டொனால்டு 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் சுவிட்சர்லாந்தில் ஏழு புதிய இடங்களைத் திறக்க திட்டமிட்டுள்ளது.
1976 ஆம் ஆண்டு ஜெனிவாவில் நாட்டின் முதல் மெக்டொனால்ட்ஸ் திறக்கப்பட்டதுடன், நிறுவனம் தற்போது நாடு முழுவதும் 180 உரிமையாளர்களைக் கொண்டுள்ளது.
நிறுவனம் அனைத்து புதிய உணவகங்களின் சரியான இடங்களை வெளியிடவில்லை என்றாலும்இ உள்ளூர் அறிக்கைகளின் படி கன்டோன் சுவைஸ் மற்றும் சுக்கில் குஸ்நக்கட் இல் ஒரு புதிய கிளை திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் தற்போது புதிய இடங்களைத் தேடி வருகிறது எனவும் விரிவாக்கத் திட்டங்கள் தொடர்பாக ஆலோசனைகள் இடம்பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
2023 ஆம் ஆண்டில், நிறுவனம் ஐந்து புதிய உணவகங்களை சென்ட்காலன, வாட், சூரிச். வலைஸ் போன்ற கன்டோன்களில் திறந்திருந்தது.
மேலும் பேர்ன் கன்டோனிலுள்ள ஆர்பெர்க்கில் ஒரு உணவகம் ஏற்கனவே 2024 இல் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டின் இறுதியில் நாடு முழுவதுமாக 200 கிளைகளை அமைந்திருக்க வேண்டும் என்ற திட்டத்துடன் முயற்சிகள் இடம்பெற்றுவருவதாகவும் குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.