Mannedorf ZH இல் கோரச்சம்பவம் நிர்வாணமாக பெண்ணை தாக்கிய இளைஞன் செவ்வாய்க்கிழமை மாலை சூரிச் கன்டோன் மெனடோர்பில் பாரிய குற்றச்சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
செவ்வாய் அன்று இரவு 8 மணிக்கு முன்னதாக, மெனடோர்ப் அல்மா பூங்காவில் ஒரு நபர் நிர்வாணமாக கத்திக் கொண்டிருந்ததாகவும், ஒரு நபர் அவரை உடல் ரீதியாக தாக்குவதாகவும் வழிப்போக்கர்கள் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவசர சேவையினர், பலத்த காயமடைந்த ஒரு பெண் தரையில் கிடப்பதையும், தாக்குதல் நடத்திய நபரையும் கண்டனர்.
பலத்த காயங்களுக்கு உள்ளாகிய இருந்த அந்தப் பெண் அவ்விடத்திலையே உயிரிழந்தார். சந்தேகத்திற்குரிய குற்றவாளியான 19 வயதுடைய சுவிஸ் இளைஞர் அதே இடத்தில் வைத்த போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
குற்றத்தின் பின்னணி தொடர்பாகவும், குற்றவாளி மற்றும் பாதிக்கப்பட்டவர் ஒருவரையொருவர் அறிந்திருக்கிறார்களா மற்றும் பாதிக்கப்பட்டவரின் அடையாளம் உள்ளிட்ட பிற கேள்விகள் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட 19 வயதுடைய இளைஞன் ரப்பேர்ஸ்வில் பகுதியில் வசிப்பவர் எனவும் குறித்த பூங்காவில் தோட்டவேலையில் ஈடுபட்டு வருபவர் எனவும் தெரியவந்துள்ளது.