லுஃப்தான்சா விமான நிறுவனம் நேற்று திங்கள்கிழமை முதல் ஜேர்மனியில் வேலைநிறுத்தம் மேற்கொண்டுள்ளது.
இதனால் மாலையில் இருந்து பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நிறுவனத்தின் அறிக்கையின் படி, 100,000 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படலாம் என அறிவுறுத்தியுள்ளது.
வேலைநிறுத்தம் நிறுவனத்தின் சில பகுதிகளில் புதன்கிழமை காலை 7 மணி வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பொதுவாக புதன்கிழமை இரவு முடிவடையும்.
சுவிட்சர்லாந்திற்கு செல்லும் மற்றும் புறப்படும் விமானங்களில் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தாது என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை, ஒரு சில வழித்தடங்கள் மட்டுமே ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஜெனீவா விமான நிலையத்தில், ஜெனீவாவிலிருந்து புறப்படும் ஆறு விமானங்களும், வரும் ஏழு விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இவை ஜெனீவா, முனிச் மற்றும் பிராங்பூட் இடையேயான தொடர்புடைய விமானங்கள்.
சூரிச் விமான நிலையத்திலும் பெரிதளவில் பாதிப்புகள் ஏற்படாது என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று செவ்வாயன்று முனிச் மற்றும் பிராங்பூட்டுக்கு லுஃப்தான்சா விமானத்தின் நான்கு வழிகள் மட்டுமே ரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.