சூரிச்சில் நிலத்தின் விலைகள் இரட்டிப்பாகியுள்ளது சூரிச் நகரில் நிலத்தின் விலை சமீப ஆண்டுகளில் பாரியளவில் உயர்ந்துள்ளது. 2010 முதல்,வளர்ந்த சொத்துக்களின் சதுர மீட்டருக்கு விலை இரட்டிப்பாகியுள்ளது.
கடந்த வியாழன் அன்று வெளியிடப்பட்ட நகர புள்ளிவிவரங்களின்படி, கட்டிடம் உட்பட சதுர மீட்டருக்கான மொத்த விலைகள் 2010 முதல் 4,300 பிராங்குகளிலிருந்து 8,700 பிராங்குகளாக இரட்டிப்பாகியுள்ளன.
குறிப்பிட்ட விலைகள் இடத்தைப் பொறுத்து மாறுபடுகிறது. மாவட்டம் ஒன்றில் கடந்த நான்கு ஆண்டுகளில் ஒரு சதுர மீட்டருக்கு சுமார் 60,000 பிராங்குகள் செலவாகியுள்ளது. வான்கோப் திராச மற்றும் ஷாப்பிங் மைலின் அருகாமையில் இது ஒரு சதுர மீட்டருக்கு சராசரியாக 100,000 பிராங்குகள் ஆகும்.
மேலும் இடத்தைப் பொறுத்து இன்னும் அதிகரிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும் அண்மையை புள்ளிவிபரங்களின் படி மீண்டும் விலை சரிந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக, இந்த ஆண்டின் முதல் காலாண்டில் நிலத்தின் விலை உச்சத்தை எட்டியது. அதன்பின், மீண்டும் விலை சரிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.