சுவிஸ் எவ்வாறு பணத்தை சேமிக்கிறது என்பதை காட்டும் புதிய ஆய்வு முடிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
மணிலேன்ட் என்ற நுகர்வோர் தளத்தால் மேற்கொள்ளப்பட்ட சுவிஸ் முதலீட்டு ஆய்வில், பதிலளித்தவர்களில் பெரும்பாலோர் தங்கள் பணத்தை வைப்பு செய்வதில் ஆர்வமாக இருக்கின்றனர்.
91 சதவீதம் பேர் வழக்கமான கணக்குகளையும், 84 பேர் முதலீடுகளை விட சேமிப்புக் கணக்குகளையும் தேர்வு செய்கிறார்கள். அடுத்து 64 சதவீதம் பேர் தங்கள் பணத்தை ஓய்வூதியத்தில் வைத்திருப்பவர்கள் .
பதிலளித்தவர்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவானவர்கள் மட்டுமே தங்கம்- பிட்காயின்கள் அல்லது பிற கிரிப்டோகரன்சிகளில் தங்கள் பணத்தை வைக்கின்றனர். மேலும் 67 சதவீதம் பேர் தங்கள் பணத்தை வீட்டில் வைத்திருக்கிறார்கள்.
எனவும் குறித்த இணையத்தளம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் பணக்காரர்கள் பங்குச்சந்தையில் தங்கள் பணத்தை முதலீடு செய்வதாகவும் குறித்த இணையத்தளம் தெரிவித்துள்ளது.