சூரிச்சில் அண்மைக்காலமாக அதிகமான குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன, ஆனால் அவை முன்பை விட சிறியவையாகவே காணப்படுகின்றன.
சூரிச்சில் பல மாதங்களாக வீட்டுப் பற்றாக்குறையால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் சூரிச்சில் கடந்த ஆண்டு 3,047 புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டன.
இது முந்தைய ஆண்டை விட 481 அதிகமாகும். மேலும், சூரிச்சின் புள்ளியியல் அலுவலகத்தின் அறிக்கையின்படி, அதிகமான அடுக்குமாடி குடியிருப்புகள் தற்போது கட்டுமானத்தில் உள்ளதாக செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், இடத்தை மிச்சப்படுத்தவும், அதிக வீடுகளை உருவாக்கவும், சிறிய அடுக்குமாடி குடியிருப்புகளையே அதிகம் கட்டுகின்றனர். எனவே வீடுகள் ‘நெருக்கமாக’ இருக்கும்.
இந்த புதிய தங்குமிடங்களில், 51 சதவிகிதம் மக்கள் இப்போது ஒன்று அல்லது இரண்டு அறைகளுடன் வாழவேண்டியேற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.