சுவிஸில் ‘ஹோம்-ஆபிஸ்’ வேலைகள் புதிய உச்சம்
கோவிட் பரவலின் போது உச்சத்தை எட்டிய வீட்டிலிருந்து வேலை செய்வது (‘ஹோம்-ஆபிஸ்’) என்ற பணிமுறை, பாண்டமிக் முடிந்த பிறகும் குறையாமல், மாறாக தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது.
வேலைவாய்ப்பு தளம் Indeed வெளியிட்ட சமீபத்திய ஆய்வின் படி, 2025ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில், சுவிட்சர்லாந்தில் ‘ஹோம்-ஆபிஸ்’ வேலை வாய்ப்புகள் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளன.

தற்போது, மொத்த வேலைவாய்ப்பு அறிவிப்புகளில் 14% வீடிலிருந்தே பணியாற்றும் வாய்ப்புகளை வழங்குகின்றன. இது மேற்கு உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களில் சுவிட்சர்லாந்தை மூன்றாவது இடத்தில் நிறுத்தியுள்ளது.
ஆய்வாளர்களின் கருத்துப்படி, ஊழியர்களுக்கு நேர சுதந்திரம், பயணச்செலவு குறைவு, குடும்பத்துடன் நேரம் செலவிடும் வசதி போன்ற பலன்களும், நிறுவனங்களுக்கு அலுவலக பராமரிப்பு செலவுகள் குறைவு போன்ற நன்மைகளும் இந்த நடைமுறையை இன்னும் பிரபலமாக்கியுள்ளன.
சில துறைகளில், ‘ஹோம்-ஆபிஸ்’ முறையை முழுமையாக ஏற்றுக்கொண்ட நிறுவனங்கள், சிறந்த திறமைகளை உலகம் முழுவதும் இருந்து வேலைக்கு அமர்த்தும் வாய்ப்பையும் பெற்றுள்ளன.
@KeystoneSDA