சுவிட்சர்லாந்து A1 அதிவேக நெடுஞ்சாலையில் கனரக வாகன விபத்து – பல மணி நேர போக்குவரத்து நெரிசல்
வியாழக்கிழமை பிற்பகல், A1 அதிவேக நெடுஞ்சாலையில் ஒரு கனரக வாகனம் விபத்தில் சிக்கியது. இந்த சம்பவம் காரணமாக பெருமளவு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் நெரிசல், வில் (Wil) நகரம் வரை நீண்டதாகவும் போலீசார் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
வாகனம் அகற்றப்பட்டாலும் நிலைமை மோசம்
மாலை சுமார் 5:30 மணிக்குப் பிறகு, விபத்தில் சிக்கிய வாகனம் சாலையிலிருந்து அகற்றப்பட்டது. இதனால், கொசாவ் (Gossau) வெளியேறும் (Exit) இடம் முதல் விபத்து நடந்த இடம் வரை சிக்கியிருந்த வாகனங்கள் படிப்படியாக நெடுஞ்சாலையை விட்டு வெளியேற முடிந்தது.

ஆனால், மாலை நேரத்திலும் நிலைமை சீராகவில்லை. குறிப்பாக, “Bürerstich” எனப்படும் பிரபலமான சாலை பகுதியில், மூன்று வழித்தடங்களிலும் வாகனங்கள் வரிசையாக நிற்க, நீண்ட போக்குவரத்து நெரிசல் நீடித்தது.
A1 நெடுஞ்சாலையின் பல இடங்களிலும் போக்குவரத்து மிக மெதுவாக நகர்ந்தமையால் பல நூறு ஓட்டுநர்கள் மணி கணக்கில் நெடுஞ்சாலையில் சிக்கித் தவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
@BRK News