சுவிட்சர்லாந்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பள்ளிகளில் துப்பாக்கி சுடும் பயிற்சி பாடமாக்கப்படவேண்டும் என யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த யோசனை பலருக்கு தீவிரமானதாக தோன்றினாலும், சுவிஸ் மக்கள் கட்சியின் எம்.பி நில்ஸ் ஃபிக்டர் குறிப்பிடுகையில், மேல்நிலைப் பள்ளிகளில் தாக்குதல் துப்பாக்கிகளைக் கையாளுவது எப்படி என்பது தொடர்பான வழிகாட்டல்கல் கட்டாயமாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்.
‘ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் குடிமக்களின் பயிற்சி முடிந்தவரை உறுதி செய்யப்பட வேண்டும்,’ என்றும் அவர் குறிப்பிட்டார். வேற்று படையெடுப்பின் போது தயார்நிலையை உறுதிப்படுத்த இந்த திறன் மிகவும் முக்கியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுவிட்சர்லாந்தில் துப்பாக்கி சுடுதல் மற்றும் துப்பாக்கிகள் வைத்திருத்தல் தொடர்பான பல்வேறு நடமுறைகள் கட்டுப்பாடுகள் உள்ளன. எனினும் அந்த கட்டுப்பாடுகளுக்கு இணங்க துப்பாக்கிச் சுடுதல் படிப்புகள் பள்ளி பாடத்திட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட வேண்டியது அவசியம் என ஃபீச்சர் மேலும் குறிப்பிட்டார்.