ஹாய் நண்பர்களே, வணக்கம்! இன்று நான் உங்களுக்கு சொல்லப் போகிற கதை, சுவிஸ் நாட்டுல ஒரு சின்ன நகரத்துல நடக்கிற போக்குவரத்து சம்மந்தப்பட்ட பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய ஒரு சம்பவம் பற்றியது… (Birsfelden) பிர்ஸ்ஃபெல்டென் என்ற இடம், பாசல் மாநிலத்துல இருக்கு. அங்க நகர சபையோட துணைத் தலைவர் டெசிரே யாவுன் புது விதிகள் என்று சொல்லிவிட்டு திடீரென ஒரு சாலையை கார்கள் போகக் கூடாத சில சாலை என அறிவித்துவிட்டார்.
ஆனால் இது தெரியாத ஓட்டுனர்கள் வழமையாக பயணம் செய்கின்ற பாதை தானே என்ற தங்கள் பயணங்களை அந்த வழியான மேற்கொண்டு கடைசியில் வீட்டுக்கு வந்த அபராதங்களை பார்த்து இடி விழுந்த கதையாக தலையில் கைவைத்ததுதான் மிச்சம். அப்படி என்னதான் நடந்தது.. ஒரே நாளில் பல ஓட்டுனர்களையும் குடியிருப்பாளர்களையும் ஏன் அரசியல்வாதிகளையும் கூட அதிர்ச்சியடைவைத்த அந்த சம்பவம் என்ன என்பது பற்றிய சுவாரசியமான விடயங்களை அறிய வீடியோவை முழுமையாகப்பார்த்து உங்கள் கருத்துக்களையும் பதிவிடுங்கள்.
சுவிட்சர்லாந்தின் பாசல்-லாண்ட்ஷாஃப்ட் கன்டோனில் உள்ள Birsfelden நகராட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய போக்குவரத்து கட்டுப்பாடுகள், எதிர்பாராத அளவுக்கு அதிகமான அபராதங்களை உருவாக்கி, அரசியல் மற்றும் சட்ட ரீதியான சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தன.
நகராட்சி நிர்வாக உறுப்பினரும், எஸ்.பி. கட்சியைச் சேர்ந்த துணை மேயருமான டெசிரே யாவுன், இந்த நிலைமையை பார்த்து தானே அதிர்ச்சியடைந்துள்ளதாக கூறுகிறார். புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்து ஒரே மாதத்தில், தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போக்குவரத்து விதிமீறல்கள் பதிவாகி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். குடியிருப்பாளர்கள், பொருள் விநியோக சேவைகள் அல்லது சிறப்பு அனுமதி பெற்றவர்களுக்கு மட்டுமே சில குடியிருப்பு வீதிகளில் வாகனப் பயணம் அனுமதிக்கப்பட்டுள்ளது. அனுமதி இல்லாமல் அந்த வீதிகளில் 15 நிமிடத்திற்குள் பயணம் செய்தால், தானியங்கி முறையில் அபராதம் விதிக்கப்படுகிறது.

“வாகன ஓட்டத் தடைகள் தெளிவாக சின்னங்கள் மூலம் குறிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், ஏன் இவ்வளவு அடிக்கடி அவை மீறப்படுகின்றன என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடியாமல் இருப்பதாக,” யாவுன் கூறியுள்ளார். தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட விதிமீறல்களின் அடிப்படையில், நகராட்சிக்கு ஒரே நாளில் ஒரு லட்சம் சுவிஸ் ஃப்ராங்க்களுக்கு மேற்பட்ட அபராத வருவாய் கிடைக்கிறது என்று SRF ஊடகம் சுட்டிக்காட்டியிருந்தது.
கடந்த செப்டம்பர் தொடக்கத்திலிருந்து, Birsfelden நகரின் சில குடியிருப்பு பகுதிகளில் இந்த புதிய போக்குவரத்து தடைகள் அமலில் உள்ளன. குடியிருப்பு பகுதிகளில் தேவையற்ற போக்குவரத்தை குறைத்து, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே இதன் பிரதான நோக்கம் என்று நகராட்சி விளக்கம் அளித்துள்ளது.
என்னதான் இந்த அபராதங்கள் அரசுக்கு ஒரு நிதியை பெற்றுத்தந்தாலும் இன்னுமொரு புறம் சின்னதாக ஒரு தலையிடியையும் கொண்டுவந்துள்ளது. காரணம் விதிமீறல்களின் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக இருந்தால் அவர்களுக்கான அபராததொகைக்கான பில்களை தயார் செய்து அனுப்புவது வழமையாக வேலை செய்யும் சிலரால் முடியாத காரணம். இவ்வாறு அபராதங்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக, நகராட்சி நிர்வாகம் கடும் நிர்வாகச் சுமையை எதிர்கொண்டு வருகிறது. தற்போது மூன்று பணியாளர்கள் முழுநேரமாக அபராதங்களைச் செலுத்தவேண்டியவர்களுக்கான பில்களை அனுப்பும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதுவும் போதாத நிலையில், கூடுதல் பணியாளர்கள் அவசரமாக தேவைப்படுவதாக துணை மேயர் தெரிவித்துள்ளார். புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்ததிலிருந்து, நகராட்சி அலுவலகங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் நிலையும் உருவாகியுள்ளது. உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல், வெளிநாட்டு வாகன ஓட்டுநர்களும் இந்த விதிமுறைகளை அறிந்து கொள்ளும் வகையில், முக்கிய வழிநடத்தல் செயலிகள் மற்றும் நெவிகேஷன் சேவைகளில் இந்த புதிய தடைகளை சேர்க்குமாறு நகராட்சி கோரியுள்ளது. ஆனால் இதுவரை சில சேவை வழங்குநர்களே அந்த மாற்றங்களை செய்துள்ளதாக நகராட்சி தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், சுவிட்சர்லாந்து டூரிங் கிளப் எனப்படும் TCS அமைப்பு, குறிப்பாக பாசல்-ஷ்டாட் மற்றும் பாசல்-லாண்ட்ஷாஃப்ட் பிரிவுகள், இந்த புதிய விதிமுறைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதன் தலைவர் கிறிஸ்டோஃப் ஹாலர், போக்குவரத்து சின்னங்கள் தெளிவற்றவை என்றும், பல உறுப்பினர்கள் காரணமின்றி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டுகிறார். சில சந்தர்ப்பங்களில் அபராதங்கள் முற்றிலும் அபத்தமானவை என்றும் அவர் கூறியுள்ளார்.
ஒரு பிரெஞ்சு எல்லைத் தொழிலாளருக்கு ஐந்து முறை அபராதம் விதிக்கப்பட்ட சம்பவமும் இதற்கு எடுத்துக்காட்டாக குறிப்பிடப்படுகிறது. வேலை இழப்பார் என்ற பயத்தால், அவர் சட்டரீதியான முறையீடு செய்யவும் தயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தற்போது பிரெஞ்சு ஊடகங்களிலும் பேசுபொருளாக மாறியுள்ளது.
இவ்வாறான செயற்பாடுகள் போக்குவரத்தை குறைக்க வேண்டும் என்ற நோக்கம் புரிந்துகொள்ளக்கூடியதே என்றாலும், Birsfelden நகராட்சி தேர்ந்தெடுத்துள்ள நடைமுறை தவறானது என ஹாலர் விமர்சித்துள்ளார். மேலும், தானியங்கி கண்காணிப்பு மற்றும் அபராத முறையின் சட்டபூர்வ அடிப்படையையும் TCS கேள்விக்குள்ளாக்கியுள்ளது. எதிர்காலத்தில் இந்த நடவடிக்கை “ஒரு முன்னுதாரணமாக மாறும் அபாயம் உள்ளது,” என அவர் எச்சரித்துள்ளார். இதன் காரணமாக, இந்த முறை மற்ற பகுதிகளுக்கும் பரவாமல் தடுக்கும் நோக்கில், நகராட்சிக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக TCS அறிவித்துள்ளது.
இது இப்படியிருக்க 15 நிமிடங்களுக்கு மேல் அந்த வீதியில் பயணிப்பவர்களுக்கு தாணியங்கி அபராதம் என்பது மெதுவாக ஓட்டுபவர்களையும் கொஞ்சம் கோபப்படத்தான் வைத்திருக்கிறது. அப்பகுதியில் வசிப்பவர்களை யாராவது வந்து இறக்கிவிட்டு செல்லும் போது கொஞ்சம் நேரம் ஆகும். எனவே 15 நிமிடங்களுக்குள் அந்த வீதியை எப்படி பறந்தா கடக்க முடியும் எனவும் அங்கலாத்துள்ளனர்.
யார் எப்படித்தான் புலம்பினால் சுவிட்சர்லாந்தில் இறுக்கமான போக்குவரத்து சட்டங்களை நாம் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். வீதி விபத்துக்கள் உயிர் இழப்புகளை தவிர்க்கும் முகமாக எங்களை எமனிடம் இருந்து காப்பாற்றுவதற்காகவே ராடார் கமராக்கள் நிறுவப்பட்டிருந்தாலும் அதையே எம்மர்கள் எமதர்மராசா என்று வர்ணிக்கும் அளவுக்கு ராடார் கமராக்கள் மக்கனை கதிகலக்கிவிட்டிருக்கிறது. ஆனாலும் சுவிட்சர்லாநதின் சில கன்டோன்களுக்கு இவ்வாறான போக்குவரத்து விதிமீறல்களால் வரக்கூடிய அபராத தொகை பல மில்லியன் பிராங்குகள் என்பதும் மறுக்கமுடியாத உண்மையே.
சுவிசில் முக்கியமாக ஒரு சில தமிழர்கள் இன்றைக்கும் போக்குவரத்து கமராவுக்கு பயந்து கமராவைக்கண்டால் பேயைக்கண்டது போல் ப்ரேக்கில் கால்வைக்கும் பல தமிழர்கள்; இருக்கத்தான் செய்கிறார்கள். அது சரி.. பில் கட்டின எங்களுக்குத்தானே தெரியும் அதன் வலியும் வேதனையும்… மீண்டு;ம் சந்திப்போம்…. வெயிட் வெயிட்….. நீங்க கடைசியாக வேகமாக ஓடி கட்டின பில் எவளவு என்றதையும் எந்த கன்டோன் என்பதையும் காமண்ல சொல்லிட்டுப்போங்க…. Bye Bye