அனைத்து உறவுகளுக்கும் Swiss Tamil Media வின் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்
SwissTamilTv உடன் அன்புடன் இணைந்துள்ள அனைத்து உறவுகளுக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள். கடந்த இரண்டு ஆண்டுகளாக SwissTamilTv மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கையும், தொடர்ந்த ஆதரவும்தான் இன்று எங்களை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது. சுவிட்சர்லாந்திதின் 26 மாநிலங்களிலும் வாழும் தமிழ் உறவுகளை ஒரே மேடையில் இணைக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட SwissTamilTv, உங்கள் பார்வையும் ஆதரவுமின்றி இந்த பயணத்தை வெற்றிகரமாக கடந்திருக்க முடியாது.
நிகழ்ச்சிகள், செய்திகள், சமூக விவகாரங்கள், கலாச்சாரப் பதிவுகள் என எங்கள் ஒவ்வொரு முயற்சியையும் நீங்கள் கவனித்து, பகிர்ந்து, கருத்து தெரிவித்து ஊக்கமளித்ததற்காக எங்களின் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்கள் ஆதரவுதான் எங்களுக்கு தொடர்ந்து உண்மையான, நம்பகமான, தமிழ் மக்களுக்கு பயன்படும் உள்ளடக்கங்களை வழங்கும் சக்தியாக உள்ளது.
அன்பு, அமைதி, மனிதநேயம் ஆகியவற்றை நினைவூட்டும் இந்த கிறிஸ்துமஸ் திருநாள், உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் நம்பிக்கையை கொண்டு வரட்டும். எதிர்வரும் ஆண்டுகளிலும் SwissTamilTv-யுடன் நீங்கள் தொடர்ந்தும் பயணிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன், உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
