சுவிஸ் திருடர்களை கைது செய்த பிரான்ஸ் போலீசார் – சுவிட்சர்லாந்தில் கொள்ளையடித்துவிட்டு தப்பியோடிய இருவரை, பிரான்ஸ் பொலிசார் கைது செய்துள்ளார்கள்.
ஜெனீவாவில் நடந்த கொள்ளைச் சம்பவம்
சனிக்கிழமை இரவு, ஜெனீவாவில் 18 வயது இளைஞர் ஒருவரைத் தாக்கிய கொள்ளையர்கள் மூன்று பேர், அவரை ஒரு காருக்குள் தள்ளி, அவரது மொபைல் மற்றும் வங்கி அட்டையைப் பிடுங்கி, அதைக்கொண்டு அவரது வங்கிக்கணக்கிலிருந்து பணம் எடுத்துள்ளார்கள்.
French police arrest Swiss thieves
ஒரு மணி நேரம் அந்த இளைஞரைப் பிடித்துவைத்திருந்த அவர்கள், பின்னர் பிரான்சுக்குத் தப்பியோடியுள்ளார்கள்.
மடக்கிப் பிடித்த பிரான்ஸ் பொலிசார்
சுவிஸ் பொலிசார் இந்த விடயம் குறித்து பிரான்ஸ் பொலிசாருக்கு தவலளித்த நிலையில், அவர்கள் அந்த மொபைல் போனை ட்ராக் செய்து, அதன் மூலம், ஞாயிற்றுக்கிழமை இரவு, பாரீஸுக்கு அருகில் கொள்ளையர்களில் இருவரை மடக்கிப் பிடித்துள்ளார்கள். திருடப்பட்ட மொபைல் மற்றும் பணத்தையும் அவர்களிடமிருந்து பொலிசார் கைப்பற்றியுள்ளார்கள்.
மூன்றாவது நபர் தலைமறைவாகிவிட்ட நிலையில், பொலிசார் அவரையும் தீவிரமாகத் தேடிவருகிறார்கள்.