பிரான்சில் உள்ளவர்களுக்கு 3,700 ஃப்ராங்க் சம்பளத்துடன் சுவிசில் வேலை
பிரான்சில் உள்ள Newrest எனும் உணவுப்பொதியளிக்கும் நிறுவனம் சுவிட்சர்லாந்தில், ஜூரிச்சில் உள்ள இரவு நேர சர்வீஸ் ரயில்களில் பணியாற்ற 100 பேர் வரை பணியாளர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளது . இது சர்வதேச ரயில்களுக்கு உணவுப்பணிகள் வழங்கும் நிறுவனம்.
ஆனால், அந்த நிறுவனமானது ஆரம்ப ஊதியமாக மாதம் 3,700 ஃப்ராங்க் (மொத்தம்) தான் வழங்க இருக்கிறது. இது பிரான்சில் ஏற்றதாக இருக்கலாம், ஆனால் சுவிட்சர்லாந்து வாழ்க்கைச் செலவுக்கேற்ப இது மிகவும் குறைவாகவே இருக்கிறது.

மேலும், இந்த வேலையை செய்யும் விண்ணப்பதாரர்கள் இரவு நேரங்களில், விடுமுறை நாட்களிலும் வார இறுதிகளிலும் வேலை செய்ய தயாராக இருக்க வேண்டும். அதோடு ஜெர்மன் மற்றும் ஆங்கிலம் பேசும் திறனும் அவசியம்.
சூரிசில் 4,000 ஃப்ராங்க்-க்கு குறைவான ஊதியம் “வாழக்கூடிய அளவாக இல்லையென” தொழிலாளி உரிமை வழக்கறிஞர் ரோஜர் ரூடால்ஃப் தெரிவித்தார். SBB நிறுவனத்திற்குச் சொந்தமான Elvetino எனும் ரயில்வே உணவுப்பணிக்கான நிறுவனத்தில் ஆரம்ப ஊதியம் 4,100 ஃப்ராங்க் என வழங்கப்படுகிறது.
இந்த சம்பள வேறுபாடு காரணமாக, ஊதிய நிலைத்தன்மை மற்றும் பணியாளர் உரிமைகள் குறித்த விவாதம் மீண்டும் முன்னிலைக்கு வருகிறது.