சுவிட்சர்லாந்தின் ஆராவ்-ரோஹ்ர் (Rohr) பகுதியில் உள்ள ஒரு பல்மாடிக் குடியிருப்பின் மேல்தள பால்கனியில் இருந்து நான்கு வயது சிறுவன் கீழே விழுந்து கடுமையாக காயமடைந்தார்.
ஹெலிகாப்டர் மூலம் அவசர சிகிச்சை
இந்த சம்பவம் வியாழக்கிழமை மதியம் 14.00 மணியளவில் நடந்தது. உடனடியாக அழைக்கப்பட்ட மருத்துவ அவசர சேவை சிறுவனுக்கு முதலுதவி அளித்தனர்.. பின்னர் அவர் மருத்துவ ஹெலிகாப்டர் மூலம் சூரிச் குழந்தைகள் மருத்துவமனைக்கு (Kinderspital Zürich) கொண்டு செல்லப்பட்டார். பால்கனியில் இருந்து விழுந்த இந்த விபத்தில் நான்கு வயது குழந்தை உயிர் பிழைத்தது கிட்டத்தட்ட ஒரு அதிசயம்தான் என்கிறார்கள் மருத்துவமனை ஊழியர்கள்.

போலீஸ் விசாரணை நடைபெறுகிறது
ஆர்காவ் மாநில போலீஸ் பேச்சாளர் பெர்னார்ட் கிராசர் (Bernhard Graser) ஊடகங்களுக்கு அளித்த தகவலின்படி, சிறுவன் எந்த உயரத்திலிருந்து எவ்வாறு விழுந்தார் என்பது தெளிவாக தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து போலீசார் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொதுமக்களுக்கு எச்சரிக்கை
அரசுப் பிரதிநிதிகள், குடியிருப்புகள் மற்றும் உயர்மாடி வீடுகளில் வசிப்போர் தங்கள் சிறிய குழந்தைகளை எப்போதும் கவனிப்பில் வைத்திருக்க வேண்டும் என்றும், பால்கனி மற்றும் ஜன்னல்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது அவசியம் என்றும் நினைவூட்டியுள்ளனர்.
@Kapo AG /blick