சூரிக் விமான நிலையம்: பயணிகள் எண்ணிக்கை உயர்வு, சரக்கு குறைவு
சுவிட்சர்லாந்தின் Zurich Airport வழியாக 2026 மார்ச் மாதத்தில் மொத்தம் 24,70,257 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இது கடந்த ஆண்டின் அதே காலத்துடன் ஒப்பிடும்போது 4.9 சதவீத அதிகரிப்பாகும்.
இந்த எண்ணிக்கையில் 16,36,651 பேர் நேரடி (உள்ளூர்) பயணிகளாக இருந்தனர். மொத்தத்தில் 33.6 சதவீதம், அதாவது 8,29,706 பேர் இடைநிலைய (transfer) பயணிகளாக இருந்தனர்.
விமான இயக்கங்களின் எண்ணிக்கையும் உயர்வைக் கண்டுள்ளது. 2025 மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது, 2.7 சதவீதம் அதிகரித்து 21,492 விமானங்கள் புறப்பட்டதும் தரையிறங்கியதும் பதிவாகியுள்ளது. ஒவ்வொரு விமானத்திலும் சராசரியாக 130 பயணிகள் இருந்ததாகவும், இது கடந்த ஆண்டை விட 2.8 சதவீதம் அதிகம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், இருக்கை நிரப்பு விகிதம் 2.1 சதவீத புள்ளிகள் உயர்ந்து 77.2 சதவீதமாக பதிவாகியுள்ளது.

ஆனால் சரக்கு போக்குவரத்து துறையில் சிறிய சரிவு காணப்படுகிறது. மார்ச் மாதத்தில் மொத்தம் 39,993 டன் சரக்குகள் மட்டுமே கையாளப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டின் இதே காலத்தை விட 3.6 சதவீதம் குறைவாகும்.
இந்த தரவுகள், கோவிட் காலத்திற்குப் பிறகு விமானப் பயணங்களில் தொடர்ந்து வளர்ச்சி காணப்பட்டாலும், சரக்கு துறையில் இன்னும் நிலைமை முழுமையாக சீராகவில்லை என்பதை சுட்டிக்காட்டுகின்றன.