டிஜிட்டல் வரியை தள்ளுபடி செய்வதாக டிரம்பிற்கு பெடரல் கவுன்சில் உறுதி
சுவிஸின் ஏற்றுமதிக்கு பாதிப்பை உண்டாக்கக்கூடிய 39% வரைச் சுங்கச் சுமையை குறைப்பதற்காக சுவிட்சர்லாந்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தி வருகிறது. இதில் பல நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுவதன்படி, புதிய ஒப்பந்தத்தின் சமீபத்திய வரைவு (அத்தியாயம் 4: டிஜிட்டல் வர்த்தகம்) மூலம் சுவிஸ் டிஜிட்டல் வரியை அறிமுகப்படுத்தமாட்டோம் என்று அமெரிக்காவிடம் உறுதி அளித்துள்ளது.
இது வாஷிங்டனின் முக்கிய கோரிக்கைக்கான பதிலாகும். டொனால்ட் டிரம்ப் தனது “Truth” தளத்தில், அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு டிஜிட்டல் வரி விதிக்கும் நாடுகளுக்கு புதிய சுங்கங்களும் கட்டுப்பாடுகளும் வருவதாக எச்சரித்திருந்தார். பெர்னின் இந்த உறுதி நாடாளுமன்றத்தில் அதிருப்தியை கிளப்பியது. பச்சைக் கட்சியின் பிரான்சிஸ்கா ரைசர் “சுவிஸ் அச்சுறுத்தலால் தளரக்கூடாது, என்று கூறி எதிர்த்தார்.

சோசல்டெமோக்ராடிக் கட்சியின் ஜோன் புல்ட் இதை “சமரச ஒப்பந்தம்” என்றும் பொருளாதாரத்திற்கும் ஜனநாயகத்திற்கும் தவறு என்றும் சாடினார். மறுபுறம், PLR இன் மார்செல் டோப்லர் டிஜிட்டல் வரி, நுகர்வோருக்கும் சுவிஸ் பொருளாதாரத்துக்கும் சம சுமை என எச்சரிக்க, UDC வின் ஃபிரான்ஸ் க்ரூட்டர் “எதிர்காலத் தொழில்நுட்பங்களை அளவுக்கு மீறி ஒழுங்குபடுத்தக் கூடாது” என்று பெர்னின் நிலைப்பாட்டை ஆதரித்தார்.
இதேவேளை, ஐரோப்பாவில் பிரான்ஸ் 2019 முதல் 3% டிஜிட்டல் வரியை அமல்படுத்தி ஆண்டுக்கு சுமார் 785 மில்லியன் யூரோவசூலிக்கிறது; இத்தாலி, ஆஸ்திரியா, ஸ்பெயின் ஆகியவையும் இதே பாதையில் செல்கின்றன. இதனால், டிஜிட்டல் வரியை கடுமையாக எதிர்க்கும் அமெரிக்காவுக்கும், கடுமையான ஒழுங்குமுறைகளை வலியுறுத்தும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில் சுவிஸ் தனது வர்த்தகக் கள திட்டத்தை சமநிலைப்படுத்த வேண்டிய அவசியம் அதிகரித்துள்ளது.
©AFP