சுவிட்சர்லாந்தில் சிறைத்தண்டனை பெறுபவர்களின்எ எண்ணிக்கையில் வீழ்ச்சி
சுவிட்சர்லாந்தில் 6 மாதத்திற்குள் குறைந்த சிறைத்தண்டனைகள் பெரும்பாலும் செயல்படுத்தப்படவில்லை என்று புதிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2024-ம் ஆண்டு, 6 மாதத்திற்குள் குறைந்த சிறைத்தண்டனையை பெற்றவர்கள் சிறையில் அடைக்கப்படுவதில் குறைவு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 6,000 பேர் சிறைக்கு சென்றிருந்தால், இவ்வாண்டு இந்த எண்ணிக்கை 3,000 ஆகக் குறைந்துள்ளது. இது சுவிட்சர்லாந்தின் புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.
புதிய சட்டம் மாற்றத்தை ஏற்படுத்தியதா?
2024 ஜனவரி 1-ம் தேதி முதல், புதிய சட்டத்தின் படி, ஒருவரை சிறைக்கு அனுப்புவதற்கு முன்னர், பொது வழக்குரைஞர்கள் அவரை நேரில் விசாரணை நடத்த வேண்டும். ஆனால், வழக்குரைஞர்களுக்கு ஏற்கனவே அதிக பணி இருந்ததால், பலர் இந்த விசாரணையை தவிர்த்து, குற்றவாளிக்கு சிறைத்தண்டனைக்கு பதிலாக அபராதம் விதிக்கத் தொடங்கியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

மோதல், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், சிறிய திருட்டுகள் போன்ற குற்றங்கள், இப்போது சிறைத்தண்டனையின்றி சமாளிக்கப்படுகின்றன. குற்றவாளிகள் பண அபராதம் செலுத்தி விடுதலையாகிறார்கள். இது, நீதித்துறை மென்மையானதாக மாறிவிட்டதா? என்ற கேள்வியையும் எழுப்புகிறது.
வெளட் (Vaud) கண்டோனில், போதை மருந்து குற்றங்களுக்கு நடப்பாண்டு மிகக் கடுமையான சிறைத்தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன. கிழக்குச் சுவிஸ் பகுதியில், தண்டனைகள் குறைவாக உள்ளன.
2023 முடிவில்: கிழக்குச் சுவிஸ்: 100,000 மக்களுக்கு 63 சிறைவாசிகள். வெளட் 100,000 மக்களுக்கு 109 சிறைவாசிகள். முடிவாக… இந்த புதிய நிலைமை, நீதித்துறையின் நடைமுறை குறித்து பல கேள்விகளை எழுப்புகிறது. குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்படாமல், அபராதம் மூலம் விடுதலையாகிறார்கள் என்ற நம்பிக்கையானது, பொதுமக்களிடையே நீதி மீதான நம்பிக்கையை பாதிக்கக்கூடியது.
அதிகாரிகள், இந்த மாற்றத்தின் காரணங்களை தெளிவுபடுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிக்கான பாதை மென்மையாக்கப்படக்கூடாது; அது பொதுமக்களின் நம்பிக்கையையும் பாதுகாப்பையும் பாதிக்கக்கூடும் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.