சுவிட்சர்லாந்தில் வினியோகிக்கப்படும் போலி கடிதங்கள் தொடர்பில் மக்களுக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
‘நீங்கள் சுவிட்சர்லாந்தை விட்டு வெளியேற வேண்டும்’ என குறிப்பிட்டு சுவிட்சர்லாந்தின் இடம்பெயர்வுக்கான மாநில செயலகத்தின் போர்வையில் இந்த போலி கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
இதனால் பலரும் குழப்பமடைந்துள்ளனர். இந்த குடியேற்ற கடிதத்திற்கு எதிராக அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பல வெளிநாட்டினர், குறிப்பாக நாட்டின் ஜேர்மன் மொழி பேசும் பகுதியில், சுவிட்சர்லாந்திற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான மக்கள் சுதந்திர இயக்கம் உடன்படிக்கையின்படி இடம்பெயர்வுக்கான மாநில செயலகத்திலிருந்து உத்தியோகபூர்வ தோற்றமுடைய கடிதமே இவ்வாறு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
அதில் ‘உங்கள் குடியிருப்பு அனுமதி ரத்து செய்யப்பட்டது.’ எனவே நாட்டை விட்டு வெளியேறவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பந்தப்பட்ட பெறுநர்களிடம் இருந்து விசாரணைகளை எதிர்கொண்ட சுவிட்சர்லாந்தின் இடம்பெயர்வுக்கான மாநில செயலகம் கடிதங்கள் போலியானவை என்றும்இ அதைப் புறக்கணிக்குமாறும், மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
எல்லாவற்றிற்கும் மேலாக, கடிதத்தில் உள்ள ஞசு குறியீட்டைக் கிளிக் செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.