சுவிஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் மீது பணியாளர்கள் வழக்கு சுவிட்சர்லாந்தில் கோவிட் காலத்தில் பல நிறுவனங்கள் தமது ஊழியர்களுக்கு கட்டாய தடுப்பூசியை அமுல்படுத்தியது.
தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாதவர்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டார்கள். அது போன்றதொரு நடவடிக்கை சுவிஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தினாலும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
தற்போது அவ்வாறான நடவடிக்கைக்காக புதிய சிக்கலை சுவிஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் எதிர்கொண்டுள்ளது. கோவிட் தடுப்பூசி தொடர்பான பணிநீக்கத்திற்காக சுவிஸ் ஏர்லைன்ஸ் குழு உறுப்பினர்கள்இ நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.
டிசம்பர் 2021 இல், சுவிட்சர்லாந்தின் தேசிய விமான நிறுவனமான சுவிஸ் ஏர்லைன்ஸ் தனது கேபின் பணியாளர்களுக்கு கட்டாய தடுப்பூசியை ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தியது. இணங்காத எவரும் விமானத்தில் பறக்க அனுமதிக்கப்படவில்லை.
தடுப்பூசி ஏற்றிக்கொள்ள மறுத்த சுமார் 150 பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தனர். இப்போது நியாயமற்ற பணிநீக்கத்திற்காக விமான நிறுவனம் மீது அவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இது பற்றி சுவிஸ் ஏர்லைன்ஸ் நிர்வாகம் குறிப்பிடுகையில், அதன் பயணிகள் மற்றும் பணியாளர்களைப் பாதுகாக்கும் பொறுப்பு தமது நிறுவனத்திற்கு இருப்பதாக வாதிடுகிறது.
மேலும், விமானம் பறந்த பல நாடுகளில் தரையிறங்க அனுமதிக்க தடுப்பூசிக்கான ஆதாரம் தேவைப்பட்டது எனவும் கூறுகிறது. குறித்த வழக்கின் தீர்பு எப்போது வெளியாகும் என்பது தெரியவில்லை.