சுவிஸ் வாழ் தமிழர்களுக்கு அவசியமான ஒரு தகவல் இது. எனவே செய்தியை முழுமையாக படிப்பதோடு தயவுசெய்து அதிகம் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுடைய ஒவ்வொரு பகிர்வும் ஒருவரை இழப்பில் இருந்து காப்பாற்றும். சரி விடயத்திற்கு வருவோம்…
பொதுவாக இணையத்தளங்களினூடாக பண மோசடிகளில் ஈடுபடும் நபர்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள் அல்லது உங்களில் ஒருவராவது இணையத்தளங்களினுடாக பணத்தை எதோ ஒரு வழி முறையில் நம்பி இழந்திருப்பீர்கள்..
ஆனால் சுவிற்சர்லாந்தில் ஒரு இளைஞன் பலருக்கு சவால் விடும் வகையில் பலரது பணம்தை சுருட்டிக்கொண்டிருப்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்..? வெளிப்படையாக, பட்டப்பகலில் இவன் பணத்தை கொள்ளையடிப்பதற்கு வைத்திருக்கும் பெயர்தான் ‘உண்டியல்’ பண பரிமாற்று சேவை (Money Exchange).
சுவிற்சர்லாந்தை பொறுத்தமட்டில் தமிழர்களால் நடாத்தப்படும் பணபரிமாற்று சேவை நிறுவனங்கள் ஏராளமாகவே இருக்கிறது. ஆனால் அவர்களையெல்லாம் தூக்கிச்சாப்பிடும் அளவுக்கு இவனுடைய தில்லாலங்கடி வேலைகள் இருந்திருக்கிறது.
யார் இந்த இளைஞன்..? பலரது பணத்தை சுருட்டியது எப்படி..?
தான் சுவிற்சர்லாந்துக்கும் பிரான்சுக்கும் இடையிலான எல்லையில் வசிப்பதாகவும் யெனீவாவில் வேலை செய்வதாகவும் கூறியுள்ளான். மிதுசன் என்ற பெயரில் அறியப்படுகிறான். ஆனால் உண்மையில் எந்த இடத்தில் வசிப்பவன் நிஐமான பெயர் என்ன என்பது அவனுக்கு மட்டுமே தெரிந்த உண்மை. சரி இவன் எப்படி மக்களை ஏமாற்றுகிறான் எனப்பார்ப்போம். முதலில் வாட்சப் குழுமங்களினூடாக சுவிற்சர்லாந்தில் வசிப்பவர்களது தொலைபேசி இலக்கங்களை முதலில் எடுத்துக்கொள்ளுகிறான்.
பின்னர் பணபரிமாற்று என்ற பெயரில் வழமையாக இருக்கும் நாணயமாற்று பெறுமதியை விட சற்று அதிகமான பெறுமதியினை குறிப்பிட்டு அந்த தொலைபேசி இலக்கங்களுக்கு தினமும் காலை 9 மணிக்கு பிறககு குறுந்தகவல் மூலம் அனுப்புகிறான்.
இதைப்பார்த்த எமது தமிழர்கள் அடடா.. “அந்த” கடையை விட 2 பிராங் அதிகமாகவே இருக்கிறதே என அடித்து விழுந்து பணத்தை இலங்கைக்கு அனுப்ப இவனுக்கு தொலைபேசி மூலம் அழைக்கிறார்கள்… அதன் பின்னர் அவனது பாணியில் பணத்தை கொள்ளையடிக்கிறான். வெறும் 10 சதம் 20 சதத்திற்கே நாணயமாற்று விகித்தை கணக்கிலெடுத்து இலங்கைக்கு பணம் அனுப்பும் எம்மவர்களுக்கு இவன் போட்ட “தூண்டில்” மிகச்சாதுரியமானதுதான்.
பணத்தை நேரில் வந்து தரவும், அல்லது நான் சொல்லும் புகையிரத நிலையத்துக்கு (Bhanhof) வாருங்கள் நானே வந்து வாங்கி கொள்ளுகிறேன். அதிக ரேட் என்பதால் பதிவு செய்து அனுப்புவது சிரமம் என மூளைச்சலவை செய்து அறியாத பலரை Bhanhof வரை வரவழைத்து பணத்தை வாங்கிச்சென்று அப்படியே அவர்களது பணத்தை ‘ஆட்டையைப்போடுவது’ இவனது வழக்கம்.
அவருடைய ப்ரோ பைலில் காண்பிக்கப்பட்ட பெயர்
இதே பாணியில் பணத்தை கொடுத்து ஏமாந்தவர்கள் ஒருவர் இருவரல்ல என்பது உண்மைத்தகவல். இவரை சிக்க வைக்க நாம் முயற்சி செய்த போதும் நாசூக்காக நழுவி எம்மை அனைத்து இலக்கங்களிலும் இருந்து ப்ளாக் செய்து ஓடிவிட்டார். எனீனும் அவரை ஆரம்பத்தில் மறைமுகமாக எச்சரித்த போது இந்த திருகுதாள மன்னன் அலார்ட் ஆகி விட்டார் என்பதே உண்மை.
எம்மிடம் சிக்கியது எப்படி..?
எமது தொலைபேசி இலக்கத்தை வாட்சப் குழு ஒன்றில் இருந்து எடுத்து எமக்கு காலை 9 மணிக்கு பிறகு நாணயமாற்று விகித தகவலை தினமும் அனுப்புவார். அப்போது MULTI EXPRESS EXCHANGE WORLD என்ற பெயரில் அவரது ப்ரோபைல் புகைப்படம் இருந்தமையினால் நாமும் உண்மை என நம்பினோம். எமக்கு தெரிந்த சிலர் இவர் போலி என எச்சரித்ததும் நாம் இவரிடம் மெதுவாக பேச்சுக்கொடுக்க ஆரம்பித்திருந்தோம். அப்போது இவர் நாணயமாற்று மட்டுமல்ல சுவிட்சர்லாந்தில் நெடுஞ்சாலை விக்னெட்டுகளை மலிவான விலையில் கொடுத்துவருவதாகவும் சொல்லி பலரை ஏமாற்றி வந்தமை அறியமுடிந்தது.
எம்மிடம் இருந்து தப்பிக்க ப்ளாக் வேறு ஒருவருடைய புகைப்படத்தை மாற்றியபோது..
ஒரு சில நாட்களின் பின்னர் நேரடியாக வாட்சப் மூலம் தொலைபேசி அழைப்பு விடுத்து கேட்டோம் . சூரிச் இல் உங்கள் நிறுவனம் இருக்கிறதா..? நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என வினாவினோம்.. முதலில் சாட் மூலம் Geneva வில் இருப்பதாகவும்.. கிளை சூரிச்சில் இருப்பதாகவும் சொன்னவன் தொலைபேசியில் பேசும் போது சூரிச் இல்லை என மழுப்பினான்.
ஆனால் சூரிச்சில் இருப்பவர்கள் பணம் அனுப்ப விரும்பினால், சூரிச்சுக்கு வந்து பணத்தை வாங்க முடியும் என சொன்னான். சரி ஒரு கிளைதான் இருக்கிறது போல என எண்ணி மற்ற ஒரு நாணயமாற்று நிறுவத்திலும் இல்லாத அளவு மிக அதிகமாவே கொடுக்கிறீர்களே அது எப்படி என வினாவினோம்… அதற்கு பல்வேறு காரணங்கள் அவனால் சொல்லப்பட்டது….
பின்னர் வாட்சப் மூலம் தினமும் இப்படி தகவல் பரிமாற்றம் தொடர ஒரிரு வாரங்களுக்கு பிறகு எமது ஊடகத்தில் விளம்பரம் செய்யவேண்டும் என சொன்னான். நாமும் விளம்பரம் செய்லாம் ஆனால் நீங்கள் பதிவு செய்து நடாத்துகிறீர்களா என கேட்டோம். அதன் பின்னரே பதிவு இல்லை ஆனால் விரைவில் பதிவு செய்யப்போகிறோம் எனவும் பிரான்சில் தனது மாமா பதிவு செய்த ஒரு கடை நடாத்துகிறார். ஏதும் பிரச்சினை என்றால் அவரது கடையின் ஊடாக செய்வதாக சமாளிக்கலாம் எனச்சொன்னான்.
நீங்கள் விளம்பரத்தை தொடங்குங்கள்.. நான் பதிவு செய்த பின்னர் உத்தியோகபூர்வமக இணையத்தில் விளம்பரம் செய்யுங்கள் எனச்சோல்லவே… இவர் பற்றிய சிறிய விளம்பர முன்னோட்டத்தை வாட்சப் குழுமத்தில் கசியவிட்டோம். உடனடியாக நாம் நினைத்தது போல ஒரு சிலர் எமக்கு தொலைபேசி அழைப்பு எடுத்தார்கள். அவன் ஒரு “பிராடு” எனவும், ஆளை தெரியுமா..? எப்படி பழக்கம் என விசாரிக்கத்தொடங்கினார்கள். இவனால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் உள்ளனர் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டோம். அந்த இளைளுனிடம் எதையும் காட்டிக்கொள்ளாது ஆதாரங்களை திரட்ட முனைந்தோம்.
பின்னர் நேரடியாக அவருக்கு தொலைபேசி அழைப்பு எடுத்து கேள்விகளை தொடுக்க முனைந்தோம். அடுக்கடுக்கான சில கேள்விளை கேட்கவே ‘அலார்ட்’ ஆன அவன் ‘நான் அவன் இல்லை’ என்பதை உங்களுக்கு நிரூபிக்கிறேன் எனவும் என்னை பற்றி கேவலமாக பேசியவர்களது தொலைபேசி இலக்கங்களை தாருங்கள் நானே பேசிவிட்டு உங்களுக்கு சொல்லுகிறேன் என்றான். எனக்கு முதலில் இருந்தே எதிர்ப்புகள் அதிகம் எனவும்.. பெறாமையில் பணப்பரிமாற்று செய்யும் தமிழர்களே இதை திட்டமிட்டு செய்வதாகவும் சொன்னான்.
உடனடியாக பாதிக்கப்பட்ட ஒரு சிலரது இலக்கங்களை திரட்டி அவனுக்கு கொடுக்கவே அன்றிலிருந்து 3 நாட்கள் எமது தொலைபேசியை எடுக்கவே இல்லை. மீண்டும் மீண்டும் தொல்லை படித்தி, அழைப்பு விடுத்து இரண்டாவது நாளாக ஒரு குரல் பதிவு வந்தது ‘ப்ரோ’ பேச முடியாது யெர்மனியில் நிற்கிறேன் 3 நாட்களுக்கு பிறகுதான் வருவேன் வந்த பிறகு பேசுகிறேன்” என்றான்.
பேசி கிழிக்கத்தேவையில்லை என மனசுக்குள் நினைத்தபடியே… எமது ஊடகத்தரப்பில் . அவரிடம் கேட்கப்பட்டது.. எம்மால் தரப்பட்ட தொலைபேசி இலக்கத்திற்கு பேசீனிர்களா..? உண்மைத்தன்மை என்ன..? அதை முதலில் சொல்லுங்கள் பிறகு பேசலாம் என்றதும் அதற்கும் பதில் இல்லை. மறுநாள் வரையில் காத்தீருந்தும் பதில் இல்லை…. பலரிடம் பணத்தை கொள்ளையடித்த அந்த போலி பணபரிமாற்று ஆசாமி நீதான் போலிருக்கு.. விரைவில் உன்னைப்பற்றிய ஆதாரங்கள் வெளிவரும் என எச்சரித்ததும் எமது தொலைபேசி இலக்கம் அவனால் ப்ளாக் செய்யப்பட்டது.
சரி எச்சரிக்கை செய்திருக்கிறோம் தானே என அவனை அப்படியோ விட்டுவிட… அதே வாரத்தில் எமக்கு தெரிந்த வணிக நிறுவனம் ஒன்றை நடாத்தும் தமிழர் ஒருவரை ஏமாற்றியிருக்கிறான் என்ற தகவல் கிடைத்தது. அவரிடம் தொடர்புகொண்டு கேட்டபோது பணத்தை இழந்ததாக தெரிவித்தார். எப்படி கொடுத்தீர்கள்.. எனக்கேட்டபோது புகையிரத நிலையத்துக்கு நேரில் சென்று கொடுத்தேன்… பணம் போய்ச்சேரவில்லை.. அழைப்பை எடுத்தால் துண்டிக்கிறார். வாட்சப்பில் ப்ளாக் செய்துவிட்டான் என அவர் தனது ஆதங்கத்தை சொல்லி கவலைப்பட்டார்.
எனவே தான், இனியும் இந்த தகவலை அப்படியோ விட்டு வைக்க கூடாது என்பதாற்காக இனியும் யாரும் ஏமாற கூடாது என்பதற்காக இந்த செய்தியை உங்களுக்காக வழங்குகிறோம். உறவுகளே.. இலஙகைக்கோ அல்லது வேறு நாடுகளுக்கோ உங்கள் உறவுகளுக்கு பணம் அனுப்பும் போது தயவுசெய்து பதிவுசெய்யப்பட்ட பணப்பரிமாற்று நிலையங்கள் ஊடாக அனுப்புங்கள்.
வெறும் 10 சதம் 1 ருபாய்க்கு ஆசைப்பட்டு அதிக பணத்தை இப்படியான ஏமாற்று பிணாமிகளிடம் கொடுத்து ஏமாந்து கடைசியில் கவலைப்பட்டு நிற்காதீர்கள். இங்கு குளிர் பணி..என ஓடி ஓடி உழைக்கின்ற பணத்தை இங்கு உள்ளவளே திருடுவது மன்னிக்கமுடியாத குற்றம். இனி இதற்கு என்ன தீர்வு என்பது உங்கள் ஒவ்வொருவரது கையிலும்தான் இருக்கிறது. இத்தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.