2026 கோடைகால அட்டவணையில் புதிய பயண இலக்குகளை சேர்க்கும் எடல்வைஸ்
சுவிட்சர்லாந்தின் சுற்றுலா விமான சேவை நிறுவனமான Edelweiss, 2026 ஆம் ஆண்டுக்கான கோடைகால விமான அட்டவணையில் புதிய சர்வதேச பயண இலக்குகளை இணைப்பதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் பயணிகளுக்கு கூடுதல் விடுமுறை மற்றும் சுற்றுலா வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அறிவிப்பின் படி, மே 29 முதல் செப்டம்பர் 14 வரை Zurich நகரத்திலிருந்து Glasgow நகரத்துக்கு வாரத்தில் இரண்டு முறை விமான சேவை இயக்கப்படும். குறிப்பாக திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இந்த விமானங்கள் இயக்கப்படவுள்ளன.

இதனுடன், கிரேக்கத்தின் பிரபல சுற்றுலா தீவான Kefaloniaக்கு செல்லும் புதிய விமான பாதையும் சேர்க்கப்பட்டுள்ளது. ஜூன் 6 முதல் ஆகஸ்ட் 29 வரை செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் சூரிச்–கெபலோனியா விமானங்கள் இயக்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. Greece நாட்டின் இந்த தீவு அதன் இயற்கை அழகும் கடற்கரைகளும் காரணமாக ஐரோப்பிய சுற்றுலாப்பயணிகளிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த புதிய இலக்குகள், ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடான Namibiaவில் உள்ள Windhoek நகருக்கான விமான சேவைகளுக்கு கூடுதலாக சேர்க்கப்படுகின்றன. சூரிச்–வின்ட்ஹூக் விமானங்கள் ஜூன் 1 முதல் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படவுள்ளன.
பயணத் துறையில் கோடைகால தேவைகள் அதிகரித்து வரும் நிலையில், இந்த புதிய விமான சேவை கள் ஐரப்பா மற்றும் ஆப்பிரிக்காவுக்கான சுற்றுலா பயணங்களை மேலும் ஊக்குவிக்கும் என விமானத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
© KeystoneSDA