Dietikon இல் உள்ள குடியிருப்பு மற்றும் வணிக கட்டிடத்தில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் பெரும் பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது. எனினும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
குறித்த சம்பவம் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்றுள்ளதாக கன்டோனல் போலீசாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. டயர்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு கட்டமே தீக்கிரையாகியுள்ளது.
@Bildquelle: Kantonspolizei Zürich
சூரிச் கன்டோனல் போலீஸ், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்த்தபோது கட்டிடம் முழுவதும் தீப்பிடித்து எரிந்திருந்ததாக தெரிவித்துள்ளனர். Dietikon மற்றும் Schlieren தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இருப்பினும், தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பல நேரம் போராட வேண்டியிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. குடியிருப்பாளர்கள் சரியான நேரத்தில் கட்டிடத்தை விட்டு வெளியேறி காயம் இன்றி தப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
@Bildquelle: Kantonspolizei Zürich
நான்கு கட்டிடங்கள் முழுமையா எரிந்து குடியிக்க தகுதியற்றதாக மாறியிருந்தது. எனினும் அங்கிருந்த குடியிருப்பாளர்களுக்கு தங்குவதற்கு மாற்றுவழிகள் பின்பற்றப்பட்டுள்ளது.
பல்வேறு வாகனங்கள் மற்றும் கட்டிடங்களுக்கு பல லட்சம் பிராங்குகள் மதிப்பிலான பொருள் சேதம் ஏற்பட்டது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. சூரிச் கன்டோனல் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.