சுவிஸ் பெடரல் ரயில்வே வார இறுதி இரவு சேவைகளை விரிவுபடுத்துகிறது
சுவிஸ் பெடரல் ரயில்வே, 2025 டிசம்பர் 14 முதல் தனது தேசிய ரயில் காலஅட்டவணையை மாற்றும் திட்டத்தில், பெர்ன்–சூரிச்–வின்டர்தூர் பாதையில் புதிய இரவு ரயில் சேவையை அறிமுகப்படுத்த உள்ளது. கடந்த வசந்த மற்றும் இலையுதிர்காலங்களில், வார இறுதிகளில் இந்த இரவு சேவைகள் சோதனை முறையில் பரிசோதிக்கப்பட்டு பயணிகளிடத்தில் நல்ல வரவேற்பு பெற்றது.
சூரிச் விமான நிலையத்திலிருந்து முன்கூட்டியே பயணிக்கும் பயணிகளுக்கு இந்த இரவு ரயில்கள் சிறந்த வசதியாக இருக்கும் என பெடரல் ரயில்வே தெரிவித்துள்ளது. 2026ஆம் ஆண்டில் இந்த சோதனை முறையை தொடர்ந்து நீட்டிப்பது திட்டமிடப்பட்டுள்ளது. இரவு ரயில்கள் பெரும்பாலும் ஒவ்வொரு வெள்ளி மற்றும் சனிக்கிழமை இரவும் இயக்கப்படவுள்ளது. வின்டர்தூரில் இருந்து இரவு 1.40 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 3.04 மணிக்கு பெர்ன் வந்தடைகிறது. பெர்னில் இருந்து புறப்படும் ரயில் அதிகாலை 3 மணிக்கு வின்டர்தூருக்கு வருவதோடு, விமான பயணிகள் அதிகாலை 4.16 மணிக்கு சூரிச் விமான நிலையத்தை அணுகலாம்.

வார இறுதியில் இந்த இரவு ரயில் சேவைகள் சுவிட்சர்லாந்தின் முக்கிய நகரங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு இடையே தொடரும். பெடரல் ரயில்வே, இரவு சேவைகளுக்கான தேவையும், சரியான பாதைகளில் இயக்கப்பட வேண்டிய அவசியமும் குறித்து ஆண்டு முழுவதும் ஆய்வு செய்து வருகிறது. இதன் மூலம் செலவு-பயன் விகிதத்தைப் பார்க்கும் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.
பிரிபோர்க்–லாசேன், ஜெனீவா விமான நிலையம், சியோன், பீல்–லௌசான் போன்ற இடங்களுக்கு இணைந்த வார இறுதி இரவு ரயில்கள் தொடர்ச்சியாக இயக்கப்படவுள்ளது. அடுத்த ஆண்டில் தேசிய இரவு சேவையை விரிவுபடுத்துவதற்கான இறுதி முடிவையும் பெடரல் ரயில்வே எடுக்க உள்ளது. சூரிச் மற்றும் ஜெனீவா, ஓல்டன் மற்றும் பாசல், பெர்ன் மற்றும் துன், லொசேன் மற்றும் சியோன், சூரிச் மற்றும் Chur ஆகிய இடங்களுக்கு 24 மணி நேர வார இறுதி சேவை திட்டங்களும் பயணிகளுக்கு மேலும் வசதியாக இருக்கும்.