சுகாதார காப்பீட்டு நிறுவன தலைவர்களின் சம்பளத்திற்கு உச்சவரம்பு விதிக்க பரிந்துரை
சுவிஸ் தேசிய சபையின் சமூக பாதுகாப்பு மற்றும் சுகாதாரக் குழு, சுகாதார காப்பீட்டு நிறுவனங்களின் உயர் நிர்வாகிகளின் சம்பளத்திற்கு உச்சவரம்பு நிர்ணயிக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
பரிந்துரையின் படி, இந்த நிர்வாகிகளுக்கான வருடாந்திர அதிகபட்ச ஊதியம், சுவிஸ் கூட்டாட்சி நிர்வாகத்தின் உயர்ந்த சம்பள நிலைக்கு சமமாக இருக்க வேண்டும். தற்போது அந்த அளவு சுமார் 4 இலட்சத்து 5 ஆயிரம் ஃப்ராங்க் ஆகும்.
பிரதிநிதிகள் கூறுவதாவது, மக்கள் கட்டும் சுகாதார காப்பீட்டு பிரீமியங்கள் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிற நிலையில், நிறுவன தலைவர்கள் பெறும் மிகுந்த சம்பளங்கள் நியாயமற்றவை. எனவே, அவர்கள் சம்பள விவரங்களில் அதிக வெளிப்படைத்தன்மை கொண்ட கட்டுப்பாட்டு விதிமுறைகள் அவசியம் என வலியுறுத்தப்படுகிறது.

இந்த முன்மொழிவு, சமூக ஜனநாயகக் கட்சியின் (SP) தேசிய சபை உறுப்பினர் பாப்டிஸ்ட் ஹூர்னி முன்வைத்த திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. வாக்கெடுப்பில் 14 பேர் ஆதரித்து, 9 பேர் எதிர்த்தனர்.
இப்போது இந்த முன்மொழிவுக்கான ஆலோசனைக்காலம் 2025 பிப்ரவரி மாதம் வரை நீடிக்கும். அதன்பிறகு, சட்ட மாற்றம் குறித்து கூட்டாட்சி சபை தீர்மானம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுவிஸில் சுகாதார காப்பீடு கட்டணங்கள் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இந்த பரிந்துரை மக்களிடையே பெரும் ஆதரவைப் பெறும் வாய்ப்பு உள்ளது.
©WRS