வெளட் (Vaud) மாநிலம் வெளிநாட்டுக் குடியிருப்போருக்கு வாக்குரிமை வழங்க மறுப்பு
சுவிஸ் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மக்களவை வாக்கெடுப்பில் கட்டாய குடிமைப் பொறுப்பு மற்றும் அதி பணக்காரர்களுக்கு கூடுதல் வரி ஆகிய இரண்டு தேசிய முன்மொழிவுகள் பெரும் பெரும்பான்மையால் நிராகரிக்கப்பட்டன. முறையே 70.6 மற்றும் 87 சதவீத வாக்காளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனுடன், நீண்டகாலமாக சுவிஸில் வசிக்கும் வெளிநாட்டவர்களின் அரசியல் உரிமைகள் தொடர்பான மற்றொரு முக்கிய முன்மொழிவும் வோ (Vaud) கன்டோனில் நிராகரிக்கப்பட்டது.
வெளட் மாநிலத்தில் நடந்த தனிப்பட்ட வாக்கெடுப்பில், குறைந்தது பத்து ஆண்டுகள் சுவிஸில் மற்றும் அதில் மூன்று ஆண்டுகள் வோ மாநிலத்தில் வாழ்ந்த வெளிநாட்டுக் குடியிருப்போருக்கு மாநில மட்டத்தில் வாக்களிக்கும் உரிமையும், தெரிவு செய்யப்படும் உரிமையும் வழங்கும் தீர்மானம் முன்வைக்கப்பட்டது. ஆனால் 63.6 சதவீத வாக்காளர்கள் இதற்கு எதிராக வாக்களித்து முன்மொழிவை நிராகரித்தனர்.

சுவிஸின் சில கன்டோன்களில் (எ.கா. ஜூரா, நொய்ஷாத்தல்) வெளிநாட்டவர்களுக்கு வரையறுக்கப்பட்ட அளவில் வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளன. ஆனால் வெளட் போன்ற பெரிய மற்றும் அரசியல் ரீதியாக தாக்கம் உள்ள மாநிலங்களில் இந்த முன்மொழிவு இன்னும் விவாதத்திற்குரியதாகவே உள்ளது. அரசியல் உரிமைகளை விரிவுபடுத்துவது குடியேறிய சமூகங்களை மேலும் இணைந்த சமூகமாக மாற்றும் முயற்சியாக பார்க்கப்படுகிறதாலும், பாரம்பரிய அரசியல் அணுகுமுறைகள் காரணமாக மக்கள் இதை ஏற்கத் தயங்குவதாக நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.
இந்த முடிவு, சுவிஸில் குடியேற்றம், ஒருங்கிணைப்பு, அரசியல் பங்கேற்பு போன்ற கேள்விகள் தொடர்ந்து மிகுந்த விவாதத்திற்குரிய விஷயங்களாகவே நீடிப்பதை மேலும் தெளிவுபடுத்துகிறது.
© KeystoneSDA