யூரோக்கு எதிரான சுவிஸ் ஃப்ராங்க் வலிமை மேலும் அதிகரிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிராக மதிப்பை மீட்டிருந்தாலும், ஸ்விட்சர்லாந்து (Switzerland) நாட்டின் வலுவான நாணயமான சுவிஸ் ஃப்ராங்க் (Swiss Franc) முன்னிலையில் யூரோ (Euro) தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறது.
தற்போது ஒரு யூரோவின் மதிப்பு 0.9165 சுவிஸ் ஃப்ராங்காக குறைந்துள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் இதுவே யூரோ சந்தித்த மிகக் குறைந்த மதிப்பாகக் கருதப்படுகிறது. ஐரோப்பிய நாணய சந்தைகளில் இது குறிப்பிடத்தக்க மாற்றமாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலை பொருளாதார நிபுணர்களுக்கு அதிர்ச்சியளிப்பதாக இல்லை. 2026ஆம் ஆண்டிலும் சுவிஸ் ஃப்ராங்க் தனது உயர்வு போக்கைத் தொடரும் என்று அவர்கள் முன்கூட்டியே கணித்திருந்தனர். உலகளாவிய பொருளாதாரத் திடமாற்றங்கள், அரசியல் நிலைமைகள் மற்றும் பாதுகாப்பான முதலீடாக சுவிஸ் ஃப்ராங்க் கருதப்படுவது போன்ற காரணங்கள், அதன் மதிப்பை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன.

குறிப்பாக, ஐரோப்பிய ஒன்றியத்தில் நிலவும் பொருளாதார அழுத்தங்கள் மற்றும் வட்டி விகிதச் சூழல் யூரோ மீது தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதே நேரத்தில், ஸ்விட்சர்லாந்தின் நிலையான நிதி கொள்கைகளும் வலுவான வங்கி அமைப்பும் சுவிஸ் ஃப்ராங்கை உலக சந்தையில் மேலும் ஈர்ப்பான நாணயமாக மாற்றியுள்ளன.
யூரோ – சுவிஸ் ஃப்ராங்க் பரிமாற்ற விகிதத்தில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம், ஏற்றுமதி, இறக்குமதி, சுற்றுலா மற்றும் முதலீடு போன்ற துறைகளில் எதிர்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
© KeystoneSDA