இலங்கையின் மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி திரு இளம்செழியன் அவர்களுக்கு சுவிட்சர்லாந்தின் வேலணை மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த 9ம் திகதி சேவைப்பாராட்டு விழா ஒன்று இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில் இளஞ்செழியன் அவர்களின் பேச்சு அனைவரையும் அனைவரையும் வெகுவாக கவர்ந்திருந்தது. அன்றைய நிகழ்வில் அவர் என்ன பேசினார் என்பதன் முழுமையான தகவல்களை இந்த பதிவில் வழங்குகிறோம்.
….”விழா குழுவின் தலைவர் அவர்களே, வேலணை மண்ணின் மைந்தர்களின் ஏற்பாட்டில் இங்கே வந்திருக்கின்ற அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி கூறுவதுடன் நீதிபதி இளஞ்செழியன் வேலனை மண்ணுக்கு மட்டும் சொந்தமல்ல, எமது அனைத்து உறவுகளுக்கும் சொந்தம் என கூறி இங்கே வந்திருக்கின்ற அனைத்து மனித உள்ளங்களுக்கும் சிறப்புரையாற்ற வந்த பெரியோர்கள் அனைவருக்கும் முதற்கண் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன். நீதியின் குரல், இது மக்களின் குரல், உரிமை குரல், குரல் அற்றோரின் குரல், அப்படிப்பட்ட குரலில் உங்கள் முன்னிலையில் சுவிஸ் நாட்டின் தலைநகரில் நீங்கள் நடத்துகின்ற பாராட்டு விழாவில் கலந்து கொள்வதில் நான் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன்.
28 ஆண்டுகள் நீதிபதியாக எனது கடமை உருண்டோடியது. 96 ஆம் ஆண்டு யாழ் மண் சூரிய கதிர் நடவடிக்கையின் போது செம்மணி புதைகுழி, கிரிஷாந்தி என புதைகுழிகள் தோண்டுமாறு அழைக்கப்பட்டபோது எட்டு நீதிபதிகள் வழக்கை விசாரணை செய்ய மறுத்த போது ஒன்பதாவது நீதிபதியாக களத்தில் இறங்கியவன் தான் நான். குமார் பொன்னம்பலம் ஐயாவை சந்தித்தேன் ஆபத்தான வழக்கு, உயிருக்கு அச்சுறுத்தலான வழக்கு, அச்சமின்றி தீர்ப்பு வழங்குவாயா என கேட்டார். நான் சொன்னேன் என் முன் என்ன நடக்கின்றதோ, அந்த நிமிடம் வருவது எனது உத்தரவு. அதற்காக யாரிடமும் ஆலோசனையும் பெறமாட்டேன். எனக்கு எது சரியோ அதை செய்வேன் என்றேன்.
அவர் உடனடியாக புறப்படுமாறு கூறினார். மற்றைய நீதிபதிகளுக்கு அச்சுறுத்தல்கள் என கூறப்பட்டது. எனக்கும் அச்சுறுத்தல் வரும் என அரசு நம்பியது அதனால் என்னை பாதுகாப்பாக வைத்தார்கள். யாழ் மண்ணில் நீ இறங்கும் வரையும் மனைவியை தவிர வேறு எவருடனும் தொலைபேசியில் தொடர்பு கொள்ள கூடாது என அவர் கூறினார்.
புலிகள் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் விமானம் விழுந்த படியால் அனைத்து உடைமைகளும் மன்னார் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தப்பட்டது. நான் ஏன் அதை கூறுகிறேன் என்றால் அந்த நிமிடம் ஒரு மனித உரிமையின் காவலனாக, மதங்களுக்கு அப்பாற்பட்டு மனித நேயவாதியாக வாழ்ந்தவர்தான் காலம் சென்ற ஆண்டகை ராயப்பு யோசப் அவர்கள் அவர் எனக்கு பக்கவலமாக இருந்தார். மன்னா நீதிமன்றத்தில் வழக்குகள் விசாரிக்கப்பட்டு கொண்டிருந்த சமயம் வவுனியா மண் கதறுகிறது. ஆயுதம்…. அனைவரின் கையிலும் ஆயுதம்.!!

எனது பயணம் வந்து கொண்டிருந்த போது மன்னாரிலிருந்து இந்திய சுதந்திர தினத்தண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி திகதி 2000 ஆம் ஆண்டு வவுனியா நோக்கி புறப்பட்டேன். எனது வாகனத்திற்கு முன்னுக்கு நம்பர் பிளேட் இல்லாத ஒரு வாகனம் துப்பாக்கிகளுடன் சிவில் உடையில் தலையில் ரிபன் அனைத்தும் போடப்பட்ட வகையில் வாகனம் சென்றது. அந்த வாகனத்தை முந்தி நான் செல்ல முயற்சிக்கும் போது எனக்கு முந்தி செல்லுவதற்கு அனுமதி அவர்கள் கொடுக்கவில்லை. உடனடியாக போலீஸ் தலைமை அலுவலக பொறுப்பதிகாரிக்கு கூறினேன். புதிய நீதிபதி வந்து கொண்டிருக்கின்றார். வாகனத்துக்கு முன்னுக்கு ஒரு வாகனம் ஒன்று செல்லுகின்றது. நம்மர் பிளேட் இல்லை உடனடியாக சுத்தி வளைக்கும்படி கூறினேன். சுத்திவழைக்கப்பட்டது.
அவர்கள் அனைவரையும் கைது செய்து துப்பாக்கிகளுக்கு லைசன்ஸை காட்டுமாறு கூறினேன் அது அரசு வழங்கிய ஆயுதம் என்றார்கள் அது எனக்கு தெரியாது லைசன்ஸ் எனக்கு வேண்டுமென்றேன், அவர்களிடம் இல்லை அபின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டார்கள். அதன் பின்னர்தான் நான் பதவி ஏற்றேன். ஏன் அதை கூறுகிறேன் என்றால் வவுனியா மண் அச்சமயம் ஆயுதங்களால் மிகவும் நெருக்கடியை சந்தித்த காலம். அதே நேரம் ஓமந்தை கட்டுப்பாட்டு பிரதேசம் கட்டுப்பாடில்லா பிரதேசம் என பிரிக்கப்பட்டு அங்கே எல்லை பிரிக்கப்பட்டுள்ளது. மற்ற பக்கத்தில் விடுதலை புலிகளின் காவலர்கள், ஓமந்தை பக்கத்தில் ராணுவ காவலர்கள் 300 யார் தூரம் ஒருவருக்கும் சொந்தமில்லாத பிரதேசம். No Man Land… அந்த இடம் சுசுவிட்சர்லாந்தை தலமையாகமாக கொண்ட சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது.
காலை 8 மணிக்கு வரியர் திறப்பார்கள். 25 ஆயிரம் மக்கள் வவுனியா நோக்கி வருவார்கள். கொறவபொத்தானை வரியர் திறப்பார்கள் பத்தாயிரம் சிங்கள மக்கள் வவுனியா நோக்கி வருவார்கள், மன்னர் ரோட் வரியர் திறப்பார்கள், அங்கிருந்து பத்தாயிரம் மக்கள் நகரை நோக்கி வருவார்கள் அனுராதபுர வரியர் திறப்பார்கள் மதவாச்சியிலிருந்து பத்தாயிரம் மக்கள் வருவார்கள். நீங்கள் நம்ப மாட்டீர்கள் 10 மணியிலிருந்து இரண்டு மணி வரையும் வவுனியா நகரம் ஒரு லட்சம் மக்களால் பொருட்கள் வாங்குவதற்காக ஓடி திரிவார்கள். ஆனால் 2 மணிக்கு அனைவரும் திரும்ப வேண்டும் மிக விரைவாக திரும்ப வேண்டும். பேரியர் Close பண்ணுவாங்க. அந்த நேரங்களில் கைது நடவடிக்கைகள் காணாமல் போகின்ற நடவடிக்கைகள் முறைப்பாடுகள் என என பல சம்பவங்கள் நடந்துள்ளன. அப்படி உச்சக்கட்ட போர் முனையாக வவுனியா நகரம் இருந்தது. ஆனால் வவுனியா மக்கள் இடம்பெறவில்லை, நீதிமன்றத்தில் நம்பிக்கை வைத்தார்கள், ஒருவரும் இடம்பெறவில்லை.
நடப்பது நடக்கட்டும் குண்டுகள் வெடிக்கட்டும். கைதுகள் நடக்கும், நீதி கிடைக்கும் அங்கே அனைவரும் இருந்தார்கள் யாழ் நகரம் இடம்பெயர்ந்தது, மன்னார் நகரம் சில பகுதிகள் இடம்பெயர்ந்தன, ஆனால் வவுனியா நகரம் இடம்பெயரவே இல்லை. ஏன் இதை நான் கூறுகிறேன் என்றால் யுத்த களத்தில் ஒரு நீதிமன்றத்தை நடத்துவது என்பது சாதாரண விடயமும் அல்ல அங்கே நடக்கின்ற செயற்பாடுகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு சாதாரண விடயம் அல்ல எனது பிள்ளையை கொலை செய்வேன் என்றார்கள் உடனடியாக மனைவியையும் பிள்ளைகளையும் எனது தாய் தந்தையிரிடம் கொழும்பில் கொண்டு போய் ஒப்படைத்தேன். நான் தனிக்காட்டு ராஜாவாகத்தான் இருக்க வேண்டும். கடமையை புரிய வேண்டும் என்றால் அச்சமில்லாத தீர்ப்பு எழுத வேண்டும். என்றால் இந்த அயோக்கியத்தனங்களை குறைக்க வேண்டும் என்றால் தனிக்காட்டு ராஜாக இருக்க வேண்டும்.
எவன் எனது குணத்தையை கொல்லுவேன் என்றானோ நான் அந்த வழக்குக்கு நீதிபதியாக செயல்பட முடியாத சூழ்நிலை, ஏனெனில் நீதிமன்றம் என்பது சொந்தக்காரருடைய வழக்கை உறவினருடைய வழக்கை விசாரணை செய்ய முடியாது அப்படிப்பட்ட அச்சுறுத்தல் எனது குழந்தைகளுக்கு எனது மனைவிக்கு வந்தது நான் செம்மணி புதகுடியில் நிற்கும்போது ராணுவத்தினரை கைது செய்யும் உத்தரவை பிறப்பித்தேன். எட்டு ராணுவ அதிகாரிகளை 24 மணி நேரத்தில் கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பித்தேன். எனது மூத்த குழந்தை பிறக்கும் நிலையில் இருந்தது. மனைவிக்கு பிரசவ வலி. பனிக்குடம் உடைந்துவிட்டது, எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது, டாக்டர் சொன்னார் நீங்கள் வந்து கையொப்பம் போட்டால் தான் ஆபரேஷன் செய்வேன் என்றார். எனது மனைவி கதைத்துக் கொண்டிருக்கின்றார், எனது அப்பா அம்மா கதைத்துக் கொண்டிருக்கின்றார்கள், கையொப்பத்தை வந்து போடுகிறேன் என்று கேட்டுப்பார்த்தேன் அதற்கு அவர்கள் இல்ல சார் உங்களை பற்றி ஒரு மாதிரி சொல்றாங்கள் நீங்க வந்து கையோப்பத்தை போடுங்கா என்றார்கள்.
நான் வரும்போது உங்களுக்கு தெரியாது இரவு 12 மணி மணி. சரக்கு விமானம் கொழும்பில் இருந்து மீன், மரக்கறி அவற்றை ஏற்றி வரும் விமானம். இரவு 12 மணிக்கு யுத்தத்தில் இறந்து போன ராணுவத்தினரை ஏற்று செல்ல வேண்டும். நான் பலாலி ராணுவ மையக பிரிகேடியருக்கு தொலைபேசி எடுத்து இன்று கடைசி விமானம் எத்தனை மணிக்கு கொழும்பு நோக்கி புறப்படுகிறது என கேட்டேன், அவர் சொன்னார் இரவு 12 மணிக்கு அது சரக்கு விமானம் ஏன் சார் என்று கேட்டார் பிரசவ பிரச்சனை ஒன்று உண்டு நான் கட்டாயம் செல்ல வேண்டும் என்றேன். அது சடல உடல்களை ராணுவ சடலங்களை ராணுவ உடல்களை ஏற்றி செல்லும் விமானம் அதில் நீங்கள் செல்லுவது சரியில்லை சார் என்றார். எத்தனை பேர் கொண்டு போறாங்க என்று சொல்லி கேட்டேன் 20 என்றார். 21ஆக என்னையும் போட்டு ஏத்தி செல்லுங்கள் என்று அதில் பயணித்தேன்.
அந்த சரக்கு விமானம் வந்து தரை முட்டியது கொழும்பில் சர்ஜரி நடந்தது பிள்ளை பிறந்தார். அந்த பிள்ளைக்கு நான் வைத்த பெயர் ஆபிமன்யூ. தந்தை அர்ஜுனன் போர்முனையில் நிற்கும்போது கிருஷ்ண பரமாத்மா சுபத்திரையின் பிரசவத்தின் போது சொன்ன கதையின் போது வந்த கதையை நானும் அங்கே புதைகுளி தோண்டி கொண்டிருக்கின்றேன். ஒரு சமூக அவலம் அங்கே அங்கே அரங்கேறி கொண்டிருக்கின்றது. நீதி தேவைப்படுகின்றது. அச்சமயம் பிறந்த குழந்தைக்கு நான் மகாபாரதத்தின் அபிமன்யு என பேரிட்டேன். ஏன் அதை கூறுகிறேன் என்றால் தர்மம் நிலைக்க வேண்டும் என்று மகாபாரதத்தில் போராடினார்கள். அது மண்ணை மீட்டது பாரத போர். பெண்ணை மீட்டது ராமாயணம். ஆனால் எம் மண்ணில் மண்ணும் பெண்ணும் சீரழிக்கப்பட்டபோது நீதி வழங்க வேண்டிய சூழ்நிலையில் நான் இருந்தேன். அந்த வகையில் வவுனியா மாவட்டம் ஒன்பது ஆண்டுகள் ஒரு நீதிபதிக்கு மூன்று ஆண்டுகளில் இடமாற்றம்.
தொடர்ச்சியாக ஒன்பது ஆண்டுகள் நான் கடமை புரிந்தேன். இடமாற்றம் நான் கோரவும் இல்லை இல்லை அவர்கள் தரவுமில்லை. போர்முனை இறுதி போர்முனை நெருங்கி கொண்டிருக்கும்போது திருகோணமலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டேன். நான் நேசிக்கும் மாவட்டம் திருமலை. ஏனெனில் யாழ் மண் எவரும் காப்பாற்றி கொள்வார்கள் கிழக்கு மண் காப்பாற்றப்பட வேண்டிய மண். அது மட்டக்களப்பாக இருந்தால் என்ன கல்முனையாக இருந்தால் என்ன திருமலையாக இருந்தால் என்ன. சகோதரர் இருக்கிறார் கல்லார் சதீஷ் ஒரு நாள் கூட முகம் பார்த்து கதைத்ததில்லை ஆனால் அவருடைய எழுத்தாக்கங்கள் என்னை பிடிக்கும் அதில் மிக முக்கியமானது அவர் கல்லாரை சேர்ந்தவர் அதனால் மிகவும் நெருக்கமாக பிடிக்கும்.
சகோதரர் தமிழரசு கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர் அவரும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுபவர். அதனால் அவருடைய ஊரை நான் சொல்ல விரும்பவில்லை. கிழக்கின் மணி மகுடங்கள், என்னுடைய விழாவுக்கு இந்த ஏற்பாட்டாளருக்கு நான் முதற்கண் நன்றி சொல்லுவேன். வடக்கு கிழக்கு என அனைவரையும் அழைத்து இந்த பெருமையை தந்ததற்கு நான் ஏற்பாட்டாளருக்கு நன்றியை தெரிவிக்கின்றேன். மட்டக்களப்பு மாவட்டம், கல்லாறு அம்பாறை மாவட்டம், தற்சமயம் இறுதியாக பேசினார் திருமலை மாவட்டம் ,சந்தோஷமாக இருந்தது. நீதிமன்றத்திற்கு பக்கத்து வீடு என்றார் நல்ல காலம் அவர் என்னை சந்திக்கவில்லை.
இலங்கையின் உச்சக்கட்ட ராணுவ நடவடிக்கைகளில் முதலாவது சூரிய கதிர், (யாழ் மாவட்டம்), நான் அதன் பின்னர் நீதிபதியாக அங்கு சென்றேன். இரண்டாவது ஆப்பரேஷன் எடிபல (மன்னார் மாவட்டம்) மன்னார் நீதிபதியாக சென்றேன். மூன்றாவது ஆப்பரேஷன் ஜேசிக்குறு வவுனியா நீதிபதியாக சென்றேன். யுத்த நிறுத்தம் வவுனியா கச்சேரியில் கையப்பமிடப்பட்டது வவுனியா நீதிபதியாக இருந்தேன். இறுதிப்போர் 2006ஆம் ஆண்டு தொடங்கியது. வவுனியா நீதிபதியாக இருந்தேன் யுத்தம் முடிவடையும் போது அங்கு இருக்கவே இல்லை.
இருக்கவே இல்லை அல்ல, இருக்க விருப்பமில்லை. ஏனெனில் அவ்வளவு உச்சக்கட்ட யுத்தம் அங்கே நடந்தது. ஆனால் அங்கே இறுதி யுத்தம் நடக்கின்றது.. காயமடைந்தவர்களை கப்பலில் ஏத்தி ஸ்ரீலங்கா சர்வதேச செஞ்சிலுவை சங்கம் திருமலை நோக்கிதான் கொண்டு வந்தார்கள். அங்கும் ஆஸ்பத்திரி முற்று முழுதாக முல்லத்தீவில் காயமடைந்த அனைவரும் அனுமதிக்கப்பட்ட சூழ்நிலையில் அதிக கெடுபிடிகள் அங்கே நடந்தது. அவற்றையும் ஓரளவுக்கு நீதிபதி என்ற முறையில் மீட்டு எனது கடமையை செய்தேன். இறுதியாக எங்களுடைய திருமலையில் வர்ஷா என்ற குழந்தை கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்பட்டு கொலை செய்யப்பட்டாள். ஆறு வயது நான்கு பேர் கைது செய்யப்பட்டார்கள். நான்கு பேரையும் நீங்கள் சொல்வது போல் என்கவுண்டரில் அரசு என்ன மாதிரி சுட்டார்கள் தெரியவில்லை. காரணங்கள் சொன்னார்கள் நாலு பேரும் துப்பாக்கியை பறிக்க முனைந்த போது சுட்டு கொள்ளப்பட்டார், கூட்டி போகும்போது சுட்டுக்கொல்லப்பட்டார் என ,! அப்பொழுது நான் சொன்னேன் இது சுட்டு கொன்றது அநீதியானது அப்பொழுது அவங்க மக்கள் சொன்னார்கள் சார் 10 நிமிடத்தில கேஸ் முடிஞ்சது நீங்க விசாரிச்சா 10 வருஷம் விசாரிப்பீங்க..
மக்களின் நிலையும் அப்படிப்பட்ட சூழ்நிலைதான் இருந்துச்சு எது இருந்தாலும் கைது செய்யப்பட்டவனை அவர் எவனாக இருந்தாலும் கைது செய்யப்பட்டவன் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதை நான் நெருக்கமாக இருந்தேன். இந்த விழாக்கள் ஒரு வகையில் சந்தோஷம் மறுபுறத்தில் சில சில வேதனைகளாகவும் இருக்கின்றது. காலம் பதில் சொல்லும்..!!! காலம் பதில் சொல்லும்..!! அப்பொழுது மீண்டும் இளம்செழியன் யார் என்பதும் தெரியும் என கூறி விடைபெற்று செல்லுகிறேன். நன்றி வணக்கம்.
செய்தி தொகுப்பு :- தேவா மதன்