சுவிசில் விலங்குகளுக்கான உணவு விளம்பரத்தை தடை செய்ய கோரிக்கை க்ரீன்பீஸ் என்ற அமைப்பு இறைச்சி விளம்பரங்களை சுவிட்சர்லாந்தில் தடை செய்ய வேண்டும் என்று சுவிஸ் பாராளுமன்றத்தில் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.
தன்னார்வ தொண்டுநிறுவனமான க்ரீன்பீஸ் என்ற அமைப்பின் சுவிஸ் பிரிவு, நாடாளுமன்றத்தில் மனு ஒன்றை அளித்தது.
இது இறைச்சி உட்ப முட்டை மற்றும் பால் பொருட்களையும் உள்ளடக்கிய விலங்கு உணவுகளுக்கான விளம்பரங்களை தடை செய்யுமாறு எம்.பி.க்களை வலியுறுத்தியது.
கிரீன்பீஸைப் பொறுத்தவரை, விலங்குகளின் உணவு உற்பத்தியானது காலநிலையில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்துவதாக தெரிவிக்கின்றது.
இந்த அமைப்பின் நடவடிக்கை குறிப்பாக, சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய பல்பொருள் அங்காடிகளை குறிவைக்கிறது.
இந்த அங்காடிகளே இவ்வாறான உணவுகளை ‘பெரிய தள்ளுபடியுடன் விற்பனையை ஊக்குவிக்கிறது. இதனால் நுகர்வு தூண்டுகிறது.’ என குற்றம் சாட்டியுள்ளது. இந்த மனு தொடர்பாக இதுவரை பிரதிநிதிகளிடம் இருந்து எந்த பதிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.