சூரிச்சின் லாங்ஸ்திராசவில் பாலியல் தொழிலாளர்களைப் பாதுகாக்க அதிகாரப்பூர்வ சிவப்பு விளக்கு மண்டலங்களாக மாற்றப்படவேண்டும் என சுவிட்சர்லாந்திலுள்ள சில கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
குறித்த கட்சிகளின் முன்மொழிவின்படி சூரிச்சின் லாங்ஸ்திராசவை உத்தியோகபூர்வ தெரு விபச்சார மண்டலமாக்க அனுமதி கோரப்பட்டுள்ளது. இப்பகுதியில் ஏற்கனவே செயற்பாட்டில் உள்ள பாலியல் தொழிலாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதே இந்த முயற்சியின் நோக்கமாகும என அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
கிளப்கள், விபச்சார விடுதிகள் மற்றும் சலூன்கள; பல காணப்படும் சூரிச்சின் லாங்ஸ்திராச, பாரம்பரிய சிவப்பு விளக்கு பகுதியாக கருதப்படுகிறது. இருப்பினும், தற்போது அங்கீகரிக்கப்பட்ட தெரு விபச்சார பகுதியாக அது இல்லை. தற்போது தெருக்களில் வாடிக்கையாளர்களைக் கோர முயற்சிக்கும் பாலியல் தொழிலாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
தற்போதுள்ள நிலைமைகளின்படி, பாலியல் தொழிலாளியை தொடர்பு கொள்வதில் உள்ள சிரமங்களுடனும், அதிக போலீஸ் பிரசன்னத்தின் பின்னணியிலும், பாலியல் தொழிலாளிகளை சட்டவிரோதத்தை நோக்கி தள்ளுகிறது என்று சில கட்சிகள் வாதிடுகின்றன.
இந்தச் சூழ்நிலை, பாலியல் தொழிலாளிகளை பாதிப்பிற்கு உள்ளாக்குகிறது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண, லாங்ஸ்திராசவில் பொருத்தமான தெருப் பகுதிகளை உத்தியோகபூர்வ தெரு விபச்சார வலயங்களாக நியமிக்குமாறு நகர சபையை மேற்படி கட்சிகள் வலியுறுத்துகிறது.