டெலிவரி ரோபோட்டுக்கு மீண்டும் அனுமதி – ஆண்டு முடிவுவரை சோதனை தொடரும்
சூரிச் ETH பல்கலைக்கழகத்தின் ஸ்பின்-ஆஃப் நிறுவனமான Rivr உருவாக்கிய டெலிவரி ரோபோட்டுக்கு, சுவிஸ் சாலை அதிகார சபை (Astra) தற்காலிக அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம், இந்த ரோபோட் மீண்டும் சாலைகளில் இயங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது – ஆனால் ஆண்டு முடிவுவரை மட்டுமே.
சாலை விதிமுறைகளில் சிக்கல்
கடந்த வாரம் Astra, இந்த டெலிவரி ரோபோட்டை “வாகனம்” என வகைப்படுத்தியது. அதன் காரணமாக, அது இனி சாலையில் இயங்கக் கூடாது என தடை விதிக்கப்பட்டது. சுவிட்சர்லாந்தில் தானியங்கி ஓட்டம் (Automated Driving) சில குறிப்பிட்ட சூழல்களில் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது – உதாரணமாக, Hightway யில் ஆட்டோபைலட் அல்லது கார் பார்க் செய்யும்போது அனுமதிக்கப்படுகிறது. ஆனால் ஓட்டுநர் இல்லாத வாகனங்கள் முன் அங்கீகரிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே இயக்கப்பட வேண்டும், மேலும் அவை எப்போதும் ஒரு கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து கண்காணிக்கப்பட வேண்டும்.
Rivr நிறுவனத்தின் எதிர்ப்பு
இந்த முடிவால் Rivr நிறுவனம் கடும் அதிருப்தியடைந்தது. Rivr நிறுவனத்தின் CEO மார்கோ ப்ஜெலோனிக் (Marko Bjelonic) தெரிவித்ததாவது: “இந்த ரோபோட் ஒரு வாகனம் அல்ல. இது தற்போது முழுமையாக மனிதர்களால் தொலைநிலை (remote control) மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. எனவே எந்த சிறப்பு அனுமதியும் தேவையில்லை” என்றார். நிறுவனம் சுவிட்சர்லாந்தை விட்டு வெளியேறத் தயாராக இருப்பதாகவும் எச்சரித்தது.

Astra-வின் தற்காலிக அனுமதி
இதற்கு பதிலளித்த Astra, “புதிய கண்டுபிடிப்புகளுக்கு எப்போதும் திறந்த மனதுடன் உள்ளோம். ஆனால் சாலை பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். பிற பயணிகள் பாதிக்கப்படக் கூடாது” என்று தெரிவித்தது. இதற்கிடையில், Rivr-க்கு தற்காலிக விதிவிலக்கு (Exception Permit) வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ரோபோட் தனது முதல் சோதனை கட்டத்தில் – மனிதர்கள் தொலைநிலையிலிருந்து இயக்கும் நிலையில் – சாலையில் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்ட சவால்
எதிர்காலத்தில் Rivr தனது ரோபோட்டை தன்னாட்சி (Autonomous Mode) முறையில் இயக்க அனுமதி பெற விண்ணப்பிக்கலாம். ஆனால் அந்த நேரத்தில், ரோபோட் அங்கீகரிக்கப்பட்ட பாதைகளில் மட்டும் இயங்க வேண்டும். இது வீடு தோறும் உணவு டெலிவரி செய்யும் சேவைக்குத் தடையாக இருக்கலாம், ஏனெனில் வாடிக்கையாளர்களின் வீடுகள் இத்தகைய நிர்ணயிக்கப்பட்ட பாதைகளில் இல்லாமல் இருக்கலாம்.
Rivr நிறுவனத்தின் எதிர்நோக்கு
இப்போதைக்கு, Rivr நிறுவனம் Astra வழங்கிய அனுமதியில் திருப்தி அடைந்துள்ளது. “சுவிட்சர்லாந்தில் எங்கள் திட்டத்தை தொடர்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். எதிர்காலத்தில் Astra உடன் நெருக்கமாக இணைந்து அடுத்த கட்டங்களை நிறைவேற்றுவதற்கு தயாராக உள்ளோம்” என்று நிறுவனம் அறிவித்துள்ளது.
© 20min