சுவிஸ் கைக்கடிகாரத் தொழிற்துறையில் நெருக்கடி
சுவிட்சர்லாந்தின் கைக்கடிகாரத் தொழிலுக்கு அமெரிக்காவில் விற்பனை அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சுவிட்சர்லாந்து மீது 39% வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார், இது அந்நாட்டின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றான அமெரிக்காவில் கடிகார விலைகளை கணிசமாக உயர்த்தும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த உயர்ந்த வரி, அமெரிக்க நுகர்வோருக்கு விலைகளை உயர்த்தி, சில பிராண்டுகளின் விற்பனை அளவை பாதிக்கும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
2024ஆம் ஆண்டில், சுவிஸ் கைக்கடிகார ஏற்றுமதியில் 16.8% அமெரிக்காவிற்கு சென்றது, இதன் மதிப்பு சுமார் 4.4 பில்லியன் சுவிஸ் பிராங்குகள் (5.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள்).

அமெரிக்க வரி அமுல்படுத்தப்பட்டால் சுவிட்சர்லாந்தின் முன்னணி பண்டக்குறிகளைக் கொண்ட கைக்கடிகார நிறுவனங்கள் பாதிப்பினை எதிர்நோக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
39% வரி, ட்ரம்ப் ஏப்ரலில் “விடுதலை நாள்” அன்று முன்மொழிந்த 31% வரியை விடவும், சுவிட்சர்லாந்தின் ஐரோப்பிய ஒன்றிய அயல் நாடுகளுக்கு விதிக்கப்பட்ட 15% வரியை விடவும் அதிகமாகும்