சுவிட்சர்லாந்தில் பாசல் நகரில் இருவருக்கிடையிலான மோதலில் ஒருவர் மரணம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவம் பாசல் பின்னிங்கனில் இடம்பெற்றுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 8.30 அளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை.
மேலும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர் அதே இடத்தில் வைத்து பாசல் போலீசாரினால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆதாரம்: Basel-Landschaft Police
அட்டைப் படம்: குறியீட்டுப் படம் © Basel-Landschaft Police