வின்டர்தூரில் நகை கடை உடைக்கப்பட்டு கொள்ளை – போலீசார் வலைவீச்சு! வின்டர்தூரில் இன்று வியாழக்கிழமை அதிகாலை ஒரு நகைக் கடை உடைக்கப்பட்டு அடையாளம் தெரியாத குற்றவாளிகளால் கடிகாரங்கள் மற்றும் நகைகள் திருடிசெல்லப்பட்டுள்ளது.
அதிகாலை 5 மணிக்கு முன்இ அடையாளம் தெரியாத மர்ம நபர்இ நகைக் கடையின் முன் கதவுக்குள் காரை பின்னோக்கி மோதியுள்ளார். அதன்பின்னர் கடிகாரங்கள் மற்றும் நகைகளை கொள்ளையர்கள் திருடிச் சென்றனர்.

பின்னர் திருட்டுக்கு பயன்படுத்திய காரில் ஏறி தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கட்டிடம் மற்றும் சரக்குகள் பல ஆயிரம் பிராங்குகளுக்கு சேதம் அடைந்துள்ளன.
சூரிச் கன்டோனல் காவல்துறை மற்றும் வின்டர்தூர் நகர காவல்துறையினரால் உடனடியாக அடையாளம் தெரியாத குற்றவாளியைத் தேடும் பணி தொடங்கப்பட்டள்ளதாக கன்டோனல் போலீசார் தெரிவித்துள்ளனர்.
Quelle: Kantonspolizei Zürich
Bildquelle: Kantonspolizei Zürich