சென்ட்காலன் கன்டோனில் பாதசாரி மீது மோதிய கார்..! 68 வயது நபர் காயம்.!!சென்ட்காலன் கன்டோனில் வெள்ளிக்கிழமை மாலை (01/13/2023) Tablatstrasse இல் காருக்கும் பாதசாரிக்கும் இடையே போக்குவரத்து விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் பாதசாரிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் :-
வெள்ளிக்கிழமை இரவு 7:20 மணியளவில், 58 வயதுடைய நபர் ஒருவர் தனது காரை Tablatstrasse இல் இருந்து Rehetobelstrasse திசையில் ஓட்டிச் சென்றார். அதே நேரத்தில், 68 வயதான பாதசாரி ஒருவர், Vogelherdstrasse இல் பாதசாரி கடவையை கடந்தார். ஓட்டுநர் அதைக்கவனிக்காமல் பாதசாரியை முட்டி மோதியுள்ளார்.
சென்ட்காலன் கன்டோனில் பாதசாரி மீது மோதிய கார்..! 68 வயது நபர் காயம்.!!
இதனால் தரையில் தூக்கி வீசப்பட்ட பாதசாரி காயங்களுக்கு உள்ளாகியுள்ளார், பின்னர் அவர் மீட்பு சேவையால் சென்ட் கேலனில் உள்ள கன்டோனல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
விபத்தை ஏற்படுத்திய கார் சேதங்களுக்கு உள்ளாகியிருந்ததோடு பலத்த மழையின் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் இது பற்றிய மேலதிக விசாரணைகளை போலீசார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.