சீன தளமான TEMU சுவிட்சர்லாந்தில் உணவை விற்க விருப்பம்
சீனாவைச் சேர்ந்த பிரபலமான ஷாப்பிங் பிளாட்பார்மான (தெமு) Temu, தற்போது சுவிட்சர்லாந்தின் மளிகை சந்தையில் (Grocery Market) நுழைய தீவிரமாகத் தயாராகி வருகிறது என்று Tages-Anzeiger நாளிதழ் தனது சனிக்கிழமையிலான பதிப்பில் தகவல் வெளியிட்டுள்ளது.
இது வரை சுவிட்சர்லாந்தில் Temu பயன்பாட்டிற்கு வரவில்லை என்றாலும், ஏற்கனவே ஜெர்மனியில் TEMU பசுமை காய்கறிகள், இறைச்சி, பானங்கள், இனிப்புகள் போன்றவற்றை விற்பனை செய்து வருகிறது. இந்த சிறப்பான அம்சங்களுடன், Temu விரைவில் சுவிஸ் சந்தையிலும் அதே மாதிரி சேவையைத் தொடங்க இருக்கிறது.
Temu என்பது சீனாவின் பெரிய இ-காமர்ஸ் கம்பெனியான Pinduoduo வின் ஒரு பங்கு. குறைந்த விலைகள் மற்றும் “local-to-local” மாடல் என்பது இதன் மிகப்பெரிய வலிமை. அதாவது, வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்த பொருட்கள் உள்ளூர் விற்பனையாளர்களிடமிருந்து நேரடியாக வாங்கப்பட்டு, அதே பகுதியில் இருக்கும் வாடிக்கையாளரிடம் நேரடியாகவே கொண்டுசெல்லப்படும். இந்த முறை, நேரத்தையும் செலவையும் குறைக்கும் என்பது Temu வின் திட்டம்.

Temu தற்போது ஐரோப்பாவில் பல நாடுகளில் மிக வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது. பல நாடுகளில் Temu, டாப் டவுன்லோடாகும் ஷாப்பிங் ஆப்ஸில் ஒன்றாக உள்ளது.
சுவிட்சர்லாந்தில் Temu எப்போது அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படும் என்ற துல்லியமான தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. ஆனால் Tages-Anzeiger செய்தித்தாளின் தகவலின்படி, உள் வேலைத்திட்டங்கள் மற்றும் வர்த்தகத் திட்டங்கள் தொடங்கப்பட்டு விட்டன.
வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு நல்ல செய்தி – குறைந்த விலையில் உணவுப் பொருட்கள், நேரடியாக வீட்டிற்கே வினியோகம் என்ற வகையில், TEMU சேவை சுவிஸ் மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெற வாய்ப்பு இருக்கிறது.
@Swissinfo