சுவிஸில் ஓட்டுநர் இன்றி இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்தும் சீன நிறுவனம்
சீனாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனம் பைடூ (Baidu) விரைவில் சுவிட்சர்லாந்தில் ஓட்டுநர் இன்றி இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த தகவலை (Baidu) பைடூவின் Intelligent Driving Group யூரோப்பியத் தலைவரான யோங் கெஸ்னர் (Yong Gessner) நேற்று வெளியான NZZ பத்திரிகையில் உறுதிப்படுத்தியுள்ளார்.
முதலில் நகர புறப்பகுதிகளில் அறிமுகம்
நிறுவனம் தெரிவித்ததன்படி, இத்திட்டம் முதற்கட்டமாக பெருநகரங்களில் அல்லாமல், சுவிட்சர்லாந்தின் புறநகர மற்றும் வெளிப்புறப் பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்படும்.
தொடக்க கட்டத்தில், வாகனங்களில் பாதுகாப்பு ஓட்டுநர்கள் உடன் இருப்பார்கள். இருப்பினும், வாகனங்கள் தானாகவே இயக்கப்படும். இதன் மூலம், முழுமையான ஓட்டுநர் இல்லா போக்குவரத்துக்கு முன்னோடியான ஒரு படியாக பைடூ திட்டமிட்டுள்ளது.

சுவிஸ் போக்குவரத்து நிறுவனங்களுடன் கூட்டாண்மை
பைடூ, சுவிட்சர்லாந்தின் ஏற்கனவே செயல்பட்டு வரும் போக்குவரத்து சேவை நிறுவனங்களுடன் கூட்டாண்மையில் இணைந்து செயல்பட விரும்புகிறது. ஆனால், இதற்கான ஆலோசனைகள் இன்னும் நடைபெற்று வருகின்றன.

தொழில்நுட்ப முன்னேற்றத்தில் ஒரு முக்கியமான கட்டம்
சுவிட்சர்லாந்தில் இந்த முயற்சி வெற்றியடைந்தால், பைடூ தனது தானியங்கி ஓட்டுநர் தொழில்நுட்பத்தை ஐரோப்பிய சந்தையில் விரிவுபடுத்தும் வாய்ப்பு அதிகரிக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர். மேலும், போக்குவரத்து பாதுகாப்பு, திறன், மற்றும் சுற்றுச்சூழல் சிக்கல்களை குறைக்கும் திறன் இந்த திட்டத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
@WRS